செவ்வாய், நவம்பர் 10, 2026

ஸ்ரீபஞ்சதசி விளக்கும் மகா வாக்கியங்கள்

 


ஸ்ரீபஞ்சதசி  விளக்கும் மகா வாக்கியங்கள்

முனைவர் மு.பழனியப்பன்,

தமிழ்த்துறைத் தலைவர் ,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடானை

கட்டுரையின் சுருக்கம் (ஆங்கிலத்தில் )

  

  • Introduction to Koviloor Vedanta Mutt: Vedanta philosophy has traditionally passed from gurus to disciples for centuries. In Tamil Nadu, the Koviloor Vedanta Mutt stands as a historic institution that pioneered teaching Vedanta structured as structured curriculum to everyone without any discrimination of caste, creed, or language.
  • The 16 Texts of Koviloor Tradition: Founded by Koviloor Andavar Muthuramalinga Swamigal and nurtured by a lineage of twenty spiritual heads (including the current pontiff Sri Narayana Gnana Desika Swamigal), a curriculum of 16 key texts was formed. This includes prominent texts like Kaivalliya Navaneetham, Viveka Chudamani, and Sri Panchadasi.
  • The Sringeri Connection & Sri Panchadasi: Sri Panchadasi was originally composed in Sanskrit by Vidyaranya, the 12th guru of the Sringeri Sharada Peetham. It consists of 15 chapters ("Pancha Dasa" meaning fifteen). The text acts as a philosophical bridge between the Sringeri and Koviloor traditions, having been translated into Tamil by Koviloor saints.
  • Explanation of the Four Mahavakyas: The fifth chapter of the text, Mahavakkiya Anugrakamanihai, beautifully distills the core spiritual declarations (Mahavakyas) from the four Vedas:
    • Rig Veda (Prajananam Brahma): Explains that ultimate consciousness (Prajananam) is Brahman. This divine intelligence manifests in all beings—from gods like Brahma and Indra to humans and animals.
    • Yajur Veda (Aham Brahmasmi): Declares "I am Brahman". It shows that the all-pervading Supreme Soul (Paramatma) resides inseparably within the individual body and intellect (Jivatma), expressed as the true 'I'.
    • Sama Veda (Tat Tvam Asi): Meaning "That Thou Art". It reminds the soul that before creation, before assuming names and forms, it existed in absolute unity with the supreme reality.
    • Atharvana Veda (Ayam Atma Brahma): Asserts "This Self is Brahman". It highlights that the individual soul, when stripped of ego (Ahankara), is a self-luminous light identical to the universal truth behind the temporary world.

          

உலகம் முழுவதும் வேதாந்தக் கருத்துகள் பரவி வருகின்றன. பல நூற்றாண்டுகளாக வேதாந்தக் கருத்துகள் குருமுகமாக ஓதப்பெற்றுச் சீடர்களால்  கற்கப்பெற்றுப் பரவி வருகின்றன.  தமிழகத்தில் ஏறக்குறைய  நூற்றுக்கும் மேற்பட்ட வேதாந்த மடங்கள் நிறுவப்பெற்று அந்த மடங்கள் வேதாந்தக் கருத்துகளை எளியோர்க்கும் அறிவித்து வந்துள்ளன. தமிழில் வேதாந்தத்தை அறிமுகம் செய்து, அதனைப் பாடங்களாக வகுத்து  நாள்தோறும் கற்கும் முறையில்  பரப்பி வந்த வேதாந்த நிறுவனங்களுள் ஒன்று கோவிலூர் வேதாந்தத் திருமடம் ஆகும். இம்மடத்தில் சாதி, பேத ,இன, மொழி வேறுபாடு இன்றி வேதாந்தப் பாடங்கள் பயிற்றுவிக்கப்பெற்றன.தற்காலத்திலும் வேதாந்தப் பாடங்கள் இணைய வழியில் பரப்பப்பெற்று வருகின்றன.

            கோவிலூர் மரபு வேதாந்த நூல்கள் என்ற அடிப்படையில் பதினாறு நூல்கள்  வேதாந்தப் பாடத்திட்டமாக கோவிலூர் ஆதீனத்தால்  உருவாக்கப்பெற்றுள்ளது. நாநா சீவ வாதக் கட்டளை, கீதாச்சாரத் தாலாட்டு, சசிவன்ன போதம், மகாராஜா துறவு, வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், இலட்சணா விருத்தி, வேதாந்த சூடாமணி, கைவல்லிய நவநீதம், விவேக சூடாமணி, அஞ்ஞவதைப் பரணி, பஞ்ச தசி, ஈசுவர கீதை, பிரம்ம கீதை, பகவத் கீதை, ஞான வாசிட்டம் ஆகியன  வேதாந்தப் பாடத்திட்டத்தில் அமைந்துள்ளவையாகும். இப்பாடத்திட்டம்  கோவிலூர் ஆண்டவர் என்னும் முத்திராமலிங்கராலும், அவரைத் தொடர்ந்த ஞானப் பரம்பரையாலும்   உருவாக்கப்பெற்றுள்ளது.

கோவிலூர் ஆண்டவர் முத்திராமலிங்கரின் வேதாந்த மரபு

            குரு தட்சிணாமூர்த்தி ஆதி ஜகத்குருவாக அமைய, அவரின் வழியில் விண்டு, பிரமன், வசிட்டர், சத்தி, பராசரர், வியாசர், சுகர், கௌடபாதர், கோவிந்த யோகி எனத் தொடரும் வேதாந்த குருமரபில்  முக்கிய ஞான குருவாக ஆதி சங்கரர் வந்தமர்கிறார். அவரின் சீடர்களான பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர், தோடகர்  ஆகிய நால்வர் வழியாக நான்கு வேதாந்த மடங்கள் முறையே  கிழக்கில் கோவர்த்தன மடம், தெற்கில் சிருங்கேரி மடம், மேற்கில் துவாரகை மடம், வடக்கில் ஜோஷி மடம் ஆகியன தொடங்கப்படுகின்றன. இந்தியாவின் தெற்குப்பகுதிக்கான வேதாந்தப் பெருவழியாக சிருங்கேரி அமைகிறது. இம்மடத்தின் தொடர்ச்சியாக நித்ய போத கந ஆசாரியார், ஞாந உத்தம ஆச்சாரியார், ஞாந கிரி ஆசாரியார், சிஹ்ம கிரி ஆசாரியார், ஈசுவர தீர்த்தர், நிருசிஹ்ம தீர்த்தர், வித்யா சங்கர தீர்த்தர், பாரதீ கிருஷ்ண தீரத்தர், வித்தியாரண்யர் ஆகியோர் வேதாந்தப் பெருவழிக்கு உறுதுணையாக இருந்தனர்.

            வித்தியாரண்ணியரின் மாணவர்  சுப்பிரமணிய தேவன், அவரைத் தொடர்ந்து நயின ஈசன், அழகப்ப வாரியன், வீரபத்திர குரு, நாகை காரோணம்  வெற்றிலைக் கடை முத்தையா சுவாமிகள், அவரின் மாணவர் உகந்த குரு சுவாமிகள்  என்று தொடரும் தென்திசை வேத மரபில் இவர்களின் வழியில் ஆண்டவர் முத்திராமலிங்கர்  வேதாந்த மரபில் அமைகிறார். இவர் கோவிலூரில் வேதாந்த மடம் பாடசாலை நிறுவி  அனைத்துத் தரப்பினரும் வேதநிலை உணர வழி வகை செய்கிறார். இவரின் வழியில் அருணாசல ஞான தேசிகர், கருணாநிதி சுவாமிகள், இராமசாமி சுவாமிகள், வீரசேகர சுவாமிகள், அண்ணாமலை சுவாமிகள், மகாதேவ சுவாமிகள், சோமசுந்தர சுவாமிகள், இராமநாத சுவாமிகள், இராமநாத சுவாமிகள் (2) , காசி விசுவநாத சுவாமிகள், நாச்சியப்ப சுவாமிகள், மெய்யப்ப சுவாமிகள் ஆகியோர் கோவிலூரின் ஞானப் பரம்பரையாக விளங்குகின்றனர். தற்போது கோவிலூர் மடத்தில் அருளாட்சி புரிந்து வரும் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள்  வேதாந்தப் பெருவழிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வளர்த்து வருகிறார்.

            கோவிலூர் மடத்தின் சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் சிருங்கேரி சாரதா பீடத்தில் அம்பிகையின் திருக்கோயிலைத் தென்னிந்தியக் கட்டடக்கலையின் அமைப்பில் செய்து தந்து  கோவிலூரின் வேதாந்தத் தொடர்பினை வலுப்படுத்தினார். சிருங்கேரி மடத்தின் வித்தியாரண்யர் இயற்றிய ஸ்ரீபஞ்சதசி என்ற வேதாந்த நூல்  கோவிலூர் அருணாசல ஞான தேசிகர் காலத்திலும், வீரசேகர ஞான தேசிகர் காலத்திலும் தமிழில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது. இதனை நித்தியானந்த சுவாமிகளும், சுப்பய்யா சுவாமிகளும் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர். இம்மொழி பெயர்ப்பே தற்போது  சாரதா பீடத்திற்கும் கோவிலூர் மடத்திற்கும்  தத்துவப் பாலமாக அமைந்து சிறக்கின்றது. இந்நூலே கோவிலூர் மரபு  சிருங்கேரி சாரதா மடத்தின் நெறிகளைப் பின்பற்றுவது என்பதை வெளிப்படுத்தும் சிறந்த சான்றாக விளங்குகிறது.

ஸ்ரீபஞ்சதசி  

            சிருங்கேரி சாரதா மடத்தின் பன்னிரண்டாம் குருவான வித்தியாரண்யர் என்பவர் வடமொழியில் இயற்றிய நூல் ஸ்ரீ பஞ்சதசி என்பதாகும். இந்நூல்  பதினைந்து அத்தியாயங்களைக் கொண்டதாகும். பஞ்ச தச என்ற பகுப்பின் வழியாக  பதினைந்து என்பது பெறப்பட்டு அதுவே இந்நூலின் பெயர்க்கான காரணமாகவும் அமைகிறது.  இந்நூல் வேதங்கள் வழி வந்த உபநிடதங்களின் பிழிவுகளை அறிவிப்பதாக உள்ளது.  இந்நூலில் வேதாந்த மகா மந்திரங்கள் நான்கின் தன்மை வெளிப்படுத்தும் நிலையை இக்கட்டுரை விவரிக்கின்றது.

மகா வாக்கியத்தின் அநுக்கிர மணிகை

            ஸ்ரீபஞ்சதசி  வேதாந்த நூலில் ஐந்தாவது பகுதியாக விளங்கும் ‘மகாவாக்கியத்தின் அநுக்கிரண மணிகை’ என்ற தலைப்பின் கீழ் நான்கு வேதங்களில் அமைந்துள்ள  நான்கு தொடர்கள் மகாமந்திரங்கள் என்று அறிவிக்கப் பெறுகின்றன. இந்நான்கு தொடர்களே  ஒவ்வொரு வேதத்தின் அடிமூலமாகவாகவும் அமைந்தனவாகும்.

ரிக்வேதம், ஐதரேய  உபநிடத மகாவாக்கியம்

            ரிக்வேதத்தில் அமைந்துள்ள வேதாந்த மகா வாக்கியம்  ‘‘பிரஞ்ஞானம் பிரம்மம்”

என்பதாகும். இதன் ஒலிவடிவை ஆராய்ந்து உரைக்கிறது பஞ்சதசி.

                        ‘‘எதனிற் காண்பன் இதனை வினாவுவன்

வதுவை கொள்வான் வழக்கிடுவான் மிக

மதுரம் அல்லது மற்றது தேருவன்

அதுகொலம் பிரஞ்ஞானம் என்பதே’’

என்ற செய்யுளின்வழி  பிரம்ம ஞானம் என்பது விளக்கப்பெறுகிறது.  கண்களால் பார்ப்பதன் வாயிலாகவும், காதுகளால் கேட்பதன் வாயிலாகவும், மூக்கினால் நுகர்வதன் வாயிலாகவும், வாயினால் இனிப்பு மற்றும் கசப்புச் சுவைகளை சுவைப்பதன் வாயிலாகவும் பிரஞ்ஞானம் ஓர் உயிருக்கு அமைகின்றது. இதன் வழியாகப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை  உணர்ந்து அதன் மெய்நிலையை அறியமுடிகிறது.

            இவ்வாறு இம்மந்திரத்தில் அமைந்துள்ள முதல் பகுதியான பிரஞ்ஞானம்   பிரம்மம் என்ற தொடருக்கான  விளக்கம்  எடுத்துரைக்கப்பெற்று, பிரம்மம் என்பதற்கான  விளக்கம் பின்வரும் பாட்டில் தரப்பெற்றுள்ளது.

                        ‘‘திசை முக இந்திர தேவர்கள் மானுடர்

அசுவம் கோ முதலானவற்றுள்ளுமே

இசையும் ஞானம் ஒன்றே பரம் ஆதலான்

நசைபரம் பிரஞ்ஞானம்  என்பாலும் ஆம்’’ (2)

நான்கு திசைகளை முகமாகக் கொண்ட பிரம்மா, இந்திரன், தேவர்கள் என்ற தேவ கணத்துள்ளும், ஆண் ,பெண், அலி என்ற மானுட கணத்துள்ளும், குதிரை, பசு போன்ற விலங்கு கணங்களிடத்தும்  இசைந்துள்ள ஞானம் ஒன்றே  அதுவே பரம் ஆகும். இதனால் ஒரே தரத்தில் அனைத்துக் கனங்களிடத்திலும் பிரம்மம் அமைந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த அறிவின் வழியாக மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள மற்றவற்றைப் பற்றியும் , உயர்ந்த இறைவனைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

யஜுர் வேதம், பிரகதாரண்ணியக உபநிடத மகா வாக்கியம்

            யஜுர் வேதத்தின் அடிப்படை தொடர்  ‘‘நான் பிரம்மமாயிருக்கிறேன்’’ ‘‘அஹம் பிரம்மாஸ்மி’’ என்பதாகும்.

                        ‘‘அறவும் பூரணம் ஆம் பரமாற்றுமா

உறும் இங்கே உணர்வுக்கு உரித்தாமுடற்

செறியும் புத்தியின் சீர்க்கரியாய்மரீஇப்

பிறிவிலாது அகம் என்று பிறங்குவான்’’ (3)

என்ற பாடலின் வழி  ‘‘நான் பிரம்மமாயிருக்கிறேன்’’ என்ற தொடரின் பொருள் அறிவுறுத்தப்பெறுகிறது.

            அறவும் பூரணமும் ஆக விளங்குவது பரமாத்மா என்று பரமாத்மாவிற்கு உரிய இலக்கணம் இச்செய்யுள் வழி அறியப்பெறுகிறது. பரமாத்மா என்பது எங்கும் எதிலும் எப்போதும் முழுமையுடன் விளங்கும் தன்மையது. இத்தகைய முழுமையும் நிறைவும் பெற்ற பரமாத்மா, இந்த உலகத்திலும் எங்கும் நிறைந்துள்ளது.

            இவ்வுலகத்தில் பரமாத்மா, உணர்வுகளுக்கு இடம் தரும் மனித உடலில்  புத்தியில் அமைந்திருக்கிறது. பரமாத்மாவுடன் அறிவுத் தொடர்புடைய புத்தியானது, நான் என்றும் பெயரில் ஒலிக்கப்படுகிறது. அந்த நான் என்பதிலும் பிரிவில்லாமல் இணைந்து இருப்பது பிரம்மம் ஆகும். எல்லையற்ற முழுமை பெற்ற பரமாத்மா, மனித உடலில் உள்ள புத்தியின் செயல்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. ஆத்ம ஞானத்திற்கு இடமளிப்பதாக விளங்குகிறது. இந்த ஆத்மாவிற்கு நான் என்பது பெயர் ஆகும்.

            பிரம்மம் என்ற ஒலியின் பொருளை விளக்க மற்றொரு செய்யுள்  எழுதப்பெற்றுள்ளது.

            ‘‘உரிமைப் பூன்றம்  என்றோது பரம்பொருள்

             பிரமமென்பதாம்  பின்னும் இங்கு ஆகினேன்

            ஒருமைத் தாம் என்று  உணர்த்துவது ஆதலால்நான்

            அருமைச் சன்மயம் ஆகின நான் அரோ’’ (4)

என்ற பாடலின் வழி  யான் பிரம்மமாக இருக்கிறேன் என்ற தொடர் உறுதிப்படுத்தப்படுகிறது.

            பரம்பொருள் என்பது எக்காலத்தும் முழுமையும் நிறை அறிவும் பெற்றது. அது பிரம்மம் என்று அழைக்கப்பெறுகிறது. அது உயிர் ஆன்மாக்களில் வேறாகாமல் ஒன்றியதாக  உள்ளது. இதனால்  நான் என்பது பிரம்மமாக இருக்கிறது என்பது உறுதியாகின்றது.

            இங்கு பிரம்மம் என்ற சொல் பரம்பொருளைக் குறிக்கின்றது.  ஒருமை என்பது பரமாத்மா ஜீவாத்மா  ஒன்றுபட்ட நிலையைக் காட்டுகிறது. சன்மயம் என்பது இரண்டும் ஒன்றாய் இருக்கும் நிலையாகும். பரப்பிரம்மம் என்று தன்னை உணரும் ஞானநிலையின் உறுதிப்பாடு இங்குச் சுட்டப்பெறுகிறது.

சாமவேதம், சாந்தோக்கிய சுருதியின் மகாவாக்கியம்

            சாம வேதத்தின் சாந்தோக்கிய சுருதி உபநிடத்தின் வழி அறியவரும் மகா வாக்கியம்  ‘‘தத்துவமசி ’’ என்பதாகும். தத் பரம்பொருள், துவம்  ஜீவாத்மா, அஸி  இருக்கிறாய் என்ற நிலையில் நீயே அதுவாக பரம்பொருளாக இருக்கிறாய் என்பது மகாவாக்கியம் ஆகும்.

            ‘‘ஏகம் ஏவ அத்துவிதம்  எனும் சத்தே

            ஆகும் நாம உருவம் கன்றது

            மாகம் ஆதி வருமுன் இன்றுறும்

            பாகுபாடிலப் பண்பு அது என்பதாம்’’ (5)

உயிர்கள் தோன்றுவதற்கு முந்தைய காலத்தில் அவை பாகுபாடின்றி  பெயர் வேறுபாடின்றி, உருவ வேறுபாடின்றி அறிவில் சிறந்த பிரம்ம நிலையிலேயே ஒன்றியிருந்தது. இன்றைக்கு பரமாத்மா ஜீவாத்மா என்ற பிரிவினையில் கிடந்தாலும், முந்தைய காலத்தில் பாகுபாடின்றி நீயே அதுவாக இருந்தாய் என்று ஆன்மா இறைநிலையில் ஒன்றாய்க் கிடந்தமையை இச்செய்யுள் உரைக்கிறது.

            ‘‘வினவுவோன் உடல் இந்தியம் மேலாதாய்த்

            துனுமெய்வத்து இங்கு தொம்பதம் என்பதாம்

            மனு நல் ஒற்றுமை மற்று அசி தேற்றிடும்

            தனிமை தொந்தத்தின் தான் பெறற் பாலதே ’’ (6)

 என்ற பாடலில் துவம், அசி என்பதற்கான பொருள்கள்  விளக்கப்பெறுகின்றன. நீயே  அதுவாய் இருந்தாய் என்பதும் உணர்த்தப்படுகிறது.

            மகா வாக்கியத்தை அறிய விரும்புவன்  உடலும் உயிரும் உடையவனாக இருக்கிறான். அவன் துவம் என்பதன் சாட்சியாக விளங்குகிறான்.  அசி என்பது  பிரம்மம், ஆன்மா இரண்டின் ஐக்கியத் தன்மையை அறிவிக்கும்.  இரண்டும் நெருங்கியத் தொடர்புடையது என்பதை  தொந்தம் என்பது குறிக்கிறது. இத்தகைய பொருந்திய  நிலை அனுபவத்தினால் கிடைப்பது.

அதர்வண வேதம், மாண்டூக்கிய உபநிடத மகாவாக்கியம்

            ‘‘அயமாத்மா பிரம்மம்’’  என்ற மகாவாக்கியம் அதர்வண வேதத்தின் மாண்டூக்கிய உபநிடத்தின் வழி இந்த உலகிற்குக் கிடைக்கின்றது.  இந்த ஆத்மா பிரம்மமாம்  என்பது இதன் பொருள் ஆகும்.  இதற்கான விளக்கத்தை

            ‘‘சொயம் விளங்கிய சோதி நற்காட்சியே

            அயம் எனும் சொலினால் உட்கொளத்தகும்

            துயர் அகங்காரம் தொக்கு இறுவாயின் வேறு

            இயைவது ஆற்றுமா என்று உரை செய்வதாம்’’ (7)

என்ற பாடலின் வழி அயம் என்பதற்கான மகாவாக்கியச் சொற்றொடரின் பொருள் விளக்கம் பெறுகிறது.

            அயம்  என்பது சுயமாக விளங்கும் சோதி நற்காட்சி உடையது ஆன்மா என்பதை விளக்க வந்தது.  மேலும் அது , அகங்காரம் அற்ற நிலையில் அமைய வேண்டும். இதுவே அயம் ஆத்மா ஆகின்றது.

            பிரம்மம் என்பதற்கான பொருளை

            ‘‘திரிசியம் பொய்ச் செகம் முழுதுக்குமோர்

             பிரிவின் மெய்ம்மைப்  பிரமம் என்பதாம்

            அரிய அப்பொருள் ஆன்றதற்சோதியாம்

            துரிய ஆன்ம சொரூபம் அதாகுமே’’ (8)

என்ற நிலையில்  பாடலாக விளக்கப்பெறுகிறது. கண்களுக்குப் புலனாகின்ற நிலையற்ற தன்மை பெற்றதான இந்த உலகம் முழுவதிற்கான மெய்ம்மை பிரமம் எனப் படுகின்றது. இப்பிரமம், அரிய பொருள் ஆகும். சுயம்பிரகாசமான தன்மை உடைய அப்பொருள்  ஆன்மாவின் சுயம்பிரகாசன தன்மையையும் பெற்று விளங்குகிறது.

            இவ்வாறு வேத மகா வாக்கியங்கள் ஸ்ரீபஞ்சதசி நூலுள் காட்டப்பெற்றுள்ளன. இவற்றின் வழியாக வேத விளக்கம் பெறமுடிகிறது. பரமாத்மா, ஜீவாத்மா, இவை இரண்டுக்குமான தொடர்பு ஆகியன அறியப்படுகின்றன.

            உலக உயிர்கள் பரமாத்மாவின் பார்வை பட்டு பரமாத்வையும் அறிந்து, தன்னையும்அறிந்து இரண்டையும் இணைவிக்கும் நிலையையும் அறிந்து முன்னேறல் வேண்டும் என்பதே வேதாந்தத் தத்துவத்தின்  கருத்தாக அமைகின்றது.

சோகம், சுகம், தத்துவம் = கண்ணதாசன்

 


சோகம், சுகம், தத்துவம் = கண்ணதாசன்

முனைவர் மு.பழனிப்பன்

முதல்வர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருமயம்

கட்டுரையின் சுருக்கம் (ஆங்கிலத்தில்)

The core essence of the provided Tamil article on Kannadasan is summarized below:
  • Introduction to the Poet: Written by Dr. M. Palaniappan, the essay introduces Kaviriasu Kannadasan (born in Sirukudalpatti) as an unparalleled ocean of literature, whose contributions to prose and poetry remain unmatched in size, emotion, and philosophical depth. [1]
  • Devotion to Bharatiyar: Kannadasan looked up to Mahakavi Bharathiyar as a divine teacher and a once-in-a-millennium phenomenon. However, he humbly rejected comparisons to Bharatiyar, stating that while he wrote poems amidst personal crises, Bharatiyar wrote poems to solve the nation's crises. [1]
  • Spiritual Turn: Originally a rationalist, a near-death accident and his subsequent interaction with the Kanchi Periyavar drastically transformed his perspective, channeling him into the world of spirituality. [1]
  • The Philosophy of Change: In his famous poem "Kavignan Yaan Orr Kaala Kanitham", he defines himself as a time-calculator of fate. He declares that "Change is my human philosophy," embracing life's dualities of praise and criticism, wealth and poverty. 
  • The Triad of Cinema Songs (Sogham, Sugam, Thathuvam): When composing for a film, Kannadasan beautifully blended three distinct elements to capture the complete human experience:
    • Sugam (Joy/Romance): Celebrated through iconic melodic hits like "Kaalangalil Aval Vasantham", where he paints vivid romantic listicles using milk, dew, and eyes as metaphors.
    • Sogham (Melancholy/Tragedy): Evoked profound sorrow through heartbreaking numbers like "Malarndhum Malaraadha" and "Idaya Veenai", using symbols like melting wax and broken sculptures to mirror emotional ruin.
    • Thathuvam (Philosophy): Simplified complex existential truths for ordinary people. Through songs like "Panathottam" and "Nallavarkellam Satchigal Rendu", he reflected on human evolution, the importance of conscience, and the continuous search of the human mind. 


சிறுகூடல் பட்டியில் பிறந்த பெருங்கடல் கவியரசு கண்ணதாசன். உரைநடை இலக்கியத்திலும்,  கவிதைப் புனைவிலும் தனக்கென தனித்த இடத்தையும்,  அளவால் பேரளவினையும், தரத்தால் மேன்மையையும் தொட்ட சிறந்த படைப்பாளர் கவியரசு கண்ணதாசன் ஆவார்.   அவர் தன் வாழ்வில் கண்டடைந்த அனுபவங்களின் வழியாக எளிமையான தத்துவங்களைத் தனது படைப்புகளில் தந்த பெருமையர்.  குறிப்பாக திரையிசைப் பாடல்களில் அவர் தந்த அனுபவ முத்துகள் அவருக்கு முன்னாலும் அவருக்குப் பின்னாலும் யாராலும் தரமுடியாதன. அவர் அடைந்த உயரத்தை யாரும் எட்டிப் பிடிக்க முடியாதவை

பாரதியாரைத் தன் முன்னவராகக் கொண்டு, படைப்புத் துறையில் கால் பதித்தவர் கண்ணதாசன். அவர் பாரதியாரை ‘‘ ஞானப் புலவன், நல்லாசிரியன், சாதிகள் இடுப்பை ஒடித்தவன், ஆயிரம் ஆண்டில் அதிசயமாக ஒரு முறை பிறக்கும்  உயர்ந்த பிறப்பு’’ என்று பாரட்டுகிறார்.  மற்றவர்கள் அவரை பாரதியாரோடு ஒப்பிடுவதைக் கூட அவர் விரும்பவில்லை.  ‘‘தான் நெருக்கடியில் கவிதைகளை எழுதுகிறேன்.  ஆனால் பாரதியார் நெருக்கடிகளைத் தீர்க்கக் கவிதைகளை எழுதியவர்’’ என்று அவர் குறிப்பிட்டு பாரதியுடன் தன்னை ஒப்பிடுவதை அவர் விரும்பவில்லை.

அவர்  பகுத்தறிவுவாதியாக இருந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட விபத்து, அக்காலத்தில்  காஞ்சிப் பெரியவருடன் ஏற்பட்ட தொடர்பு   அவரை  ஆன்மீக உலகத்திற்கு மடைமாற்றியது.

கவிஞன் யான் ஓர் காலக்கணிதம்

            தன்னைப் பற்றிக் கண்ணதாசன் ”கவிஞன் யான் ஓர் காலக்கணிதம்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வரைந்துள்ளார்.

            ‘‘கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்

… பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்

ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்

உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்

இல்லாயின் எமர் இல்லந் தட்டுவேன்

… புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது

இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்

இறந்த பின்னாலே எழுதுங்கள் தீர்ப்பு

.. மாற்றம் எனது மானிட தத்துவம்

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்’’

என்று தன்விமர்சனம் செய்து கொள்கிறார்.  இக்கவிதையில் இடம்பெறும்  ஆசை தருவன அனைத்தும்  பற்றுவேன் என்பதே கண்ணதாசன் வாழ்க்கை ஆகும்.  பொருள் இருந்தால் மற்றவர்க்கு அளிக்கும் அவர்  இல்லாத நேரம் தன் சொந்தக்காரர்களின் இல்லக்கதவுகளைத் தட்டும் பண்பினர்.  மாற்றம் என்ற மானிடத் தத்துவத்தின் மகிமை உணர்ந்தவர் கண்ணதாசன்.  எல்லாக் கவிதைக்குள்ளும் அவரின் அனுபவத் தத்துவம் வெளிப்பட்டு நிற்கும்.

சோகம்- சுகம் – அனுபவம்

            கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் தனக்கென் தனித்த முத்திரை பதி்த்தவர். அவரின் பாடல்களை  அவரின் பெயர் அடையாளம் சொல்லப்படாவிட்டாலும்  கண்டறிந்துவிடலாம். அந்த அளவிற்குக் கண்ணதாசன் தனித்தன்மை வாய்ந்த கவிதைகளை எழுதியவர். அவரின் கவிதைகளை வாசகரும் தனிப்பட அறியும் வாய்ப்பு பெற்றவர்களாக இருப்பார்கள்.

            அவர் ஒரு திரைப்படத்திற்கு முழுவதும் பாடல்கள் எழுத அமர்ந்தால்  ஒரு சோகப்பாடல்  ஒரு சுகப்பாடல் ஒரு தத்துவப் பாடல் என்ற கூட்டிணைவில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். இந்த வகைமைக்குள்  திரைப்படத்தின் கதையும் வந்துவிடும். திரைப்பட பாத்திரங்களின் தன்மையும் வந்துவிடும்.  இத்தகைய வளமான எழுத்து கண்ணதாசனின் எழுத்து ஆகும்.

சுகராகம்

            ‘‘காலங்களில் அவள் வசந்தம்” என்ற தொடக்கமுடைய பாடல்  எல்லாராலும் விரும்பப்படும் சுகராகம் ஆகும். அதில் உயர்ந்த அத்தனையும் பட்டியல் இடப்பெற்றிருக்கும்.  ‘‘பால் போல் சிரிப்பதில் பிள்ளை, அவள் பனிபோல்  அணைப்பதில் கன்னி, கண்போல் வளர்ப்பதில் அன்னை, அவள் கவிஞனாக்கினாள் என்னை ”  என்ற பாடலடிகளில் கண்ணதசானின் சுகராகத்தை உணர முடிகின்றது.

            பேசுவது கிளியா ( பணத் தோட்டம்), பறவைகள் பலவிதம் ( இருவர் உள்ளம்), பறக்கும் பந்து பறக்கும் ( பணக்காரக் குடும்பம் ) போன்ற பாடல்கள் சுகராத்தின் வெளிப்பாடுகள்

சோக கீதம்

            சோகத்தில் நம்மை அழவைக்கும் பல பாடல்கள் கண்ணதாசனால் இயற்றப்பெற்றுள்ளன.  மலர்ந்தும் மலராத, மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் போன்றன  சோக கீதங்கள். பல்லாக்க வாங்கப் போனேன் நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக  என்ற  பாடலும், இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா, இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண்முடியுமா …உருகி விட்ட மெழுகினிலே ஒளி ஏது, உடைந்து விட்ட சிலையினிலே அழகேது, பழுது பட்ட கோயிலிலே தெய்வம் ஏது, பனி படர்ந்த பாதையிலே  பயணம் ஏது  என்ற கேள்விகளில் சோகம் உறைந்து கிடக்கிறது. மலர் கொடுத்தேன் என்ற தொடக்கமுடைய பாடல்  சோகத்திற்கும் சுகத்திற்கும் ஒரே வரிகளை உடையதாக இயற்றப்பெற்றுள்ளது.

தத்துவ கானம்

            எளிய தத்துவங்களின் இனிய பதிவேடு கண்ணதாசனின் பாடல்கள் ஆகும்.  பணத்தோட்டம் பற்றிய கண்ணதாசனின் தத்துவக் கண்ணோட்டம் சிறப்பாகும்.  குரங்கு வரும் தோட்டமடி பழத் தோட்டம்,  வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம், மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்  மனிதன் விளையாடும் இடம் பணத் தோட்டம்  மனத்தோட்டம் போடுமேன்று மாயவனார் கொடுத்த உடல்  பணத்தோட்டம் போட்டதேயடி முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி  என்பதில் மனிதன் மனத் தோட்டத்தின் இயல்பு  தெரியவருகிறது.

     நல்லவர்க்கெல்லாம்  சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

     ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

     நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்  தெய்வத்தின் காட்சியம்மா”

 என்பதும் நல்ல தத்துவம்.

            தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே, என்பது எத்தனை பெரிய தத்துவம்.

            ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்

             அடுத்த மனிதன் காட்டை  அழித்து நாட்டை காட்டினான்

            மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னைத் தேடினான்

            நே்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்

            இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்

            வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்

என்று மனித வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சியைக் கணக்கிடுகிறார் கண்ணதாசன்.

            நதி எங்கே போகிறது கடலைத் தேடி

            நாளெங்கே போகிறது இரவைத் தேடி

             நிலவெங்கே போகிறது மலரைத் தேடி

            நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

என்று நினைவிற்கும் உறவிற்குமான தொடர்பினை அறிவிக்கிறார் கண்ணதாசன்.

            இவ்வாறு  சோகம், சுகம், தத்துவம் கலந்து தன் கவி முத்திரையைப் பதிக்கிறார் கண்ணதாசன்.

ஐந்தெழுத்தால் ஆறுசொலி ஏழ்கடத்தி எட்டில் ஏற்றுவிக்கும் ஐயன் சிவஞான பாலய சுவாமிகள்

 


ஐந்தெழுத்தால்  ஆறுசொலி  ஏழ்கடத்தி எட்டில் ஏற்றுவிக்கும் ஐயன்

சிவஞான பாலய சுவாமிகள்

 
                                                                        முனைவர் மு.பழனியப்பன்

                                                                        இணைப் பேராசிரியர்

                                                                        அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

                                                                        திருவாடானை 623407

                                                                        இராமநாதபுர மாவட்டம்

                                                                        9442913985

                                                                        muppalam2006@gmail.com

கட்டுரையின் சுருக்கம் (ஆங்கிலத்தில் )

English Summary of the Essay
The core essence of the provided Tamil article is summarized below: [1]
  • Introduction to the Adheenam: The Mailam Bommapuram Adheenam is a revered spiritual seat focused on guiding people towards the path of righteousness, where scholars and poets traditionally gathered to foster Tamil literature, devotion, and liberation. [1]
  • The Poet and His Work: Panruti Mani Subramaniya Iyer, an esteemed poet of this lineage, composed several literary works dedicated to the foundational seer, Adi Sivagnana Balaya Swamigal. One of his notable creations is the Sivagnana Balaya Desikendra Swamigal Uyir Varucca Maalai. [1]
  • Literary Structure: The book utilizes the sequence of the twelve Tamil soul/vowel letters (Uyir Ezhuthukkal: அ to ஔ) to sequentially extol the spiritual glories and virtues of Sivagnana Balaya Swamigal, reinforcing that souls must seek his grace as an ultimate companion. [1]
  • Alphabetical Themes (Abridged):
    • அ (A) to ஈ (Ee): Describes the Swamigal as the divine incarnation worshipped by Brahma, Vishnu, and Indra; highlights the tradition of Linga Dharanam (wearing the Shiva Lingam); notes that Tamil king Sivaprakasar was his disciple; and praises him for granting spiritual wealth far superior to the material wealth of Kubera.
    • உ (U) to ஏ (Ea): Details his power to detach devotees from worldly desires (land, gold, women); celebrates his absolute devotion to Lord Murugan at the Mailam hill; and establishes his lineage's origin from the sacred Aarathiya clan.
    • ஐ (Ai): Functions as a numerical wordplay (Enn Alankaram), depicting how he teaches the five-letter mantra (Na-Ma-Shi-Va-Ya), explains the six-faced nature of Shiva/Murugan, helps transcend the seven oceans/births, and grants the eight mystical powers (Ashta Siddhis).
    • ஒ (O) to ஔ (Au): Narrates the local legend of Sage Bala Siddhar, who raised Valli and Deivayanai as daughters before Lord Murugan arrived in disguise to marry them. It concludes by stating that only those who destroy the sin of jealousy (Oviyam) can attain the ultimate state of Anga Linga union. [1]
  • Conclusion: The text intricately maps Veerasaiva traditions—such as the Ittalinga, saffron robes, and sacred ash—to demonstrate how this continuous line of twenty spiritual heads (Adheenakarthas) has kept the flame of wisdom alive at Mailam Bommapuram. [1]


மயிலம் பொம்மபுர ஆதீனம் மக்களை நல்வழிப் படுத்தும் ஞான பீடமாகும். இவ்வாதீனத்தில் கற்றோரும், நல்லோரும், புலவர்களும் ஒருங்கிருந்து தமிழையும் பக்தியையும் முக்தியையும் வளர்த்தனர். இவ்வாதீனத்தின் புலவர் வரிசையில் ஒருவராக விளங்குபவர்  பண்ணுருட்டி மணி  சுப்பிரமணிய அய்யர் ஆவார்.  இவர் ஆதி சிவஞான பாலய சுவாமிகள் குறித்து பல இலக்கியங்களைப் படைத்தளித்துள்ளார். அவற்றுள் ஒன்று சிவஞான பாலய தேசிகேந்திர சுவாமிகள் உயிர் வருக்க மாலை என்பதாகும்.  இதில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டிலும் தொடங்கும்படியான சொற்களை முன்வைத்து வரிசைப்படி சிவஞான பாலய சுவாமிகளின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கிறார் மணி- சுப்பிரமணிய அய்யர்.

            உயிர்கள் உண்மை வழியில் பயணித்து ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட  அருள்வழி காட்டியவர் சிவஞான பாலய சுவாமிகள் ஆவார். அவரைப் போற்ற உயிர் எழுத்துகளை முன்வைத்து எழுதியிருப்பதன் வழியாக உயிர்கள் அவரை தம் துணையாகக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இந்நூல் உயிர்க்கு உறுதுணையாக அமைகின்றது. பொம்மாபுரி பொருந்தும்  சிவஞானச் செம்மல்  தாள்மலர்க்கு துதி செப்பிடும் வகையில் இந்நூல் பாடப்பெற்றுள்ளதாகக் காப்புச் செய்யுள் இதன் நோக்கத்தை எடுத்துரைக்கின்றது.

அ

            அலரவனும் அலையவனும் ஆயிரம் நயனவனும் நலமுற முப்போதும் தொழும் நாயகம்  என்று முதல் பாடல் ‘அ’ என்ற உயிர் எழுத்தில் தொடங்குகிறது.  பிரம்மாவும், விஷ்ணுவும், இந்திரனும்  தொழும் கயிலை அண்ணல்  உலக உய்ய சிவஞான பாலய  சுவாமிகளாக உலகில் தோன்றினார்  என்று முதல் பாடல்  சுவாமிகளின் தோற்றம் பற்றி உரைக்கின்றது.

ஆ

            ஆவணத்தைக் காட்டி  நம்பி ஆரூரனை அடிமை கொண்ட செய்தியைக் கொண்டு அடுத்த பாடல் தொடங்குகிறது. சிவபெருமான் ஆவணத்தைக் காட்டிச் சுந்தரரை அடிமைகொண்டதுபோல, உயிர்களைச் சுத்தப்படுத்தி  தாரணம் எனப்படும் இலிங்க தாரணம் செய்வித்து முக்தி நிலைக்கு அருளும் ஞானவடிவாக விளங்குபவர் சிவஞான பாலய தேசிக சுவாமிகள் ஆவார்  என்று இரண்டாம் பாடல் குறிக்கிறது. இங்கு வீரசைவ மரபாகிய இலிங்க தாரணம் சுட்டப்பெற்றுள்ளது.

இ

            இலங்கிடும் சீர்ச் சிவபிரகாசத் தமிழ் வேந்து ஏத்தும் ஒருநல வடிவாக அடுத்த பாடல் சிவஞான பாலய சுவாமிகளைக் குறிக்கிறது. அவரே ஞான நெறி சொற்றிடும் நாயகமணியாவார் என்றும் உறுதிபட இப்பாடல் மொழிகின்றது. இப்பாடலில் செந்தமிழ் வல்ல சிவப்பிரகாசர்  சுவாமிகளின் சீடராக விளங்கிய தன்மை அறியவருகிறது.

ஈ

            ஈகைச் செயலால்  குபேரனை வென்ற கருணையைப் பெற்றவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று இப்பாடல் கருத்துரைக்கிறது. குபேரன் செல்வம் மட்டுமே தர வல்லவன். ஆனால் சிவஞான பாலய சுவாமிகள் ஞானச் செல்வம் உட்பட அனைத்தையும் ஈகை புரியும் அண்ணல் என்று இப்பாடல் குபேரனை விடச் சிறந்தவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று குறிக்கின்றது. அடியார் மலங்களைப் போக்கி ஞானம் அருளும் ஈகைத்திறம் உடையவர் சிவஞான பாலய சுவாமிகள் ஆவார்.

உ

    உற்ற பெரும் அடியார்களின் மண், பொன்,பெண் ஆசைகளை நீக்குபவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று அடுத்தபாடல் அடியார் மலங்களைப் பட்டியலிட்டு அதனைப் போக்கும் தன்மையராக சுவாமிகளைக் காட்டுகின்றது. கற்றவர்கள் சூழ்ந்து தினம் கழிறடு நல் துதியினில் பற்று கொள்ளும் சுவாமிகள் வேறு எதன் மீது பற்று இல்லாதவர் என்பதையும் இப்பாடல் சுட்டுகிறது.

ஊ

     ஊங்குசிலம்பு என்று மயிலமலையைக் குறித்துத் தொடங்குகிறது அடுத்தபாடல். மயிலைமலை ஒரு முருகன் தாள் துணையில் பற்று கொண்டு  என்று நிரந்தமான ஞானத்திற்கு உரியரவராக விளங்குபவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று இப்பாடல் போற்றி செய்கின்றது. மேல்பாடல் தமிழ்ப் பற்றினை விளக்கியது. இப்பாடல் முருக பற்றினைக் காட்டுகிறது.

எ

            எண்ணரும் சீர் இலைவடிவேல் இறைவன் முருகன் புகழ் கொண்டு இப்பாடல் தொடங்குகிறது. சிவபெருமானையும் முருகனையும்  ஒருங்கே எண்ணி  வாழும் இனிமையவர் சிவஞான பாலய சுவாமிகள். அவர் புண்ணியன், கண்ணியன், பொம்மபுர தேவன் என்று இப்பாடல் பெருமை பேசுகிறது.

ஏ

            ஏதமில் ஆராத்திய குலத்தீபம் என்று சிவஞான பாலய சுவாமிகளை ஏ என்ற உயிர்எழுத்தில் தொடங்கும்பாடல் அடையாளம் காட்டுகிறது. வீரசைவத்தில் ஆராத்தியராக விளங்குபவர்கள் ஐவர் ஆவர். அவர்கள் சிவலிங்கத்தில் பிறந்தவர்கள். கயிலாயத்தில் இருந்த சங்கு கன்னர் கடலில் தோன்றியவர். கடலும் சிவவடிவம். அப்பு. எனவே சிவஞான பாலய தேசிக பரம்பரையும் சிவலிங்கத்தில் தோன்றிய ஆராத்திய குலப் பெருமை உடையது என்கிறார் மணி அய்யர். மேலும் கோதறு சிற்கனலிங்கம், கண்டி, திருநீறு, கோல், கல் ஆடை ஆகிய அமைப்புடன் திகழ்பவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று அவரின் தோற்றத்தையும் படிப்பவர் கண் முன் நிறுத்துகிறார் புலவர்.

ஐ

            ஐந்தவித்த என்று தொடங்கும் பாடல் எண்ணலங்காரமாக விளங்குகிறது. ஐந்து புலன்களின் ஆசைகளை அழித்த பெரியவர்கள் சிவஞான பாலய சுவாமிகளின் அடியினைப் பணிவார்கள். அவர்களுக்கு ஐந்து எழுத்தினைச் சொல்லி நல்வழி காட்டுபவர் சிவஞான பாலய சுவாமிகள். மேலும்  அவர்களுக்கு ஆறு முக இயல்பையும் அவர் எடுத்துரைப்பார். ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்திசோயசாதம் , அதோமுகம் ஆகிய ஆறுமுக இயல்பினைக் காட்டுபவர் சிவஞானி.  ஏழ் கடத்தி என்று  ஏழு பொருள்களைக் கடத்தியவர் என்றும் சிறப்பிக்கப்பெறுகிறது. இந்த ஏழ் என்பது பல பொருள்களைக் குறிப்பதாக உள்ளது. ஏழ் என்பது கடல்கள், லோகங்கள், பிறவிகள் எனப்பலவற்றையும் குறிப்பதாக உள்ளது. மேலும் ராகு கேது ஆகிய துணைக் கோள்கள் தவிர்த்து ஏழு கோள்களையும் கடத்தி நிற்பதாகவும் கொள்ள இடமளிக்கிறது. எட்டில் ஐயன் முந்துறு நன்னிலை அருளும் என்ற தொடர் வழியாக அட்டமா சித்திகள் அருள்பவர் என்றும் சிவஞான பாலய சுவாமிகளின் அருள்தன்மை தெரியவருகிறது. இவ்வாறு எண் அலங்காரமாக இப்பாடல் சிவஞான பாலய சுவாமிகளின் பெருமைகளைப்  பேசுகின்றது.

ஒ

            ஒளியிழையீர் என்று தொடங்கும் இப்பாடலில் வள்ளி தெய்வயானை ஆகியோர் பால சித்தரின் மக்களாகத் தோன்றிய நிலை விளக்கம் பெறுகிறது. பாலசித்தர் முருகப்பெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிகிறார். முருகன் காட்சி அளிக்காது காலம் நீட்டுகிறார். இதனால் வருத்தமடைந்த வள்ளி தெய்வானையர்  பால சித்தரைக் காண வருகின்றனர். அவர்களைத் தம் மகள்களாக வளர்க்கிறார் பாலசித்தர்.  தேவியரைத் தேடி முருகன் வேடன் வடிவில் பாலசித்தர் ஆசிரமத்திற்கு வருகிறான்.  சித்தர் அவ்வேடனைத் தடுக்க அவன் முருகனாகக் காட்சி தந்து அருள் புரிகிறான். வள்ளி தெய்வானையை மணக்கிறான். இவ்வகையில் முருக அருள் பெற்றவர் பால சித்தர். இதனை இப்பாடல் வழி எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

ஓ

            ஓதரு நல் உற்றிடம் என்று இப்பாடல் தொடங்குகிறது.  சாதகர், சாரணர் தாள் பணியும் பெருமையர் சிவஞானி. கள்ளிப்பாலையே உணவாக உண்டவர் சிவஞானி. தீத அகற்றுபவர் சிவஞான பாலய தேசிக சுவாமிகள் ஆவார்.

ஔ

            ஔவியம் என்ற பொறாமையை அழித்தவர்க்கே அங்க லிங்க நிலை வாய்க்கும் என்று வழிகாட்டியவர் சிவஞான பாலய சுவாமிகள். கடல் ஒலிக்கும் பொம்மையர் பாளையத்தில் வீற்றிருப்பவர் சிவஞான பாலய சுவாமிகள் ஆவார்.

            இவ்வாறு உயிர் எழுத்துகளால் உயிர்கள் சிவஞான பாலய சுவாமிகளின் பெருமையை, வள்ளல்தன்மையை அறிந்து கொள்ள வைக்கிறது இவ்வுயிர் வருக்க மாலை. உயிர்களின் தன்மையையும் அவற்றின் மலங்களையும்  இப்பனுவல் எடுத்துரைத்துள்ளது. உயிர்கள் பொன் பொருள் மண், பெண் ஆசை உடையன. பொறாமை உடையன. மலங்களைப் பெற்றன. அவற்றைச் சுத்தப்படுத்தி லிங்க தாரணம் செய்து ஞான வழிக்கு அருளும் நற்குரு சற்குரு  சிவஞான பாலய சுவாமிகள் என்று இந்நூல் உறுதி பட மொழிகின்றது.

            மேலும் இட்டலிங்கம், காவியாடை, மந்திரக் கோல், திருநீறு  ஆகியன பாலய தேசிக சுவாமிகளின் வடிவம் என்பதைக் காட்டி அந்நெறியில் ஞானப் பரம்பரை வளர்ந்து வரும் நிலையையும் இப்பாடல்கள் காட்டி நிற்கின்றன.

            மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் பழமையை, பெருமையை. ஞானத் தன்மையை விளக்குவது இந்நூல். இருபது ஆதீனகர்த்தர்கள் இறைவழியைக் காட்ட மயிலம் பொம்மபுரத்தில் வீற்றிருந்த வீற்றிருக்கும் பெருமைய இந்நூல் வழி உணரமுடிகின்றது.