சனி, டிசம்பர் 17, 2016

புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கத்தின் முப்பெரும் விழா

புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கத்தின் முப்பெரும் விழா 28.12.2016 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. ஸ்ரீசரசுவதி சங்கத்தின் 94 ஆம் ஆண்டுவிழா, ஸ்ரீசரசுவதி வித்தியாசாலையின் 84 ஆம் ஆண்டுவிழா, ஸ்ரீசரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 13 ஆம் ஆண்டுவிழா ஆகியன இணைந்த முப்பெரும்விழா இதுவாகும். காலை 9.30 மணிக்கு ஸ்ரீசரசுவதி சங்க 84 ஆம் ஆண்டுவிழா நடைபெறுகிறது. 

தலைவர் இராம. இராமநாதன் செட்டியார் முன்னிலை வகிக்கிறார். செந்தூரான் கல்வி குழுமத்தின் சேர்மன் திரு. இராம.வயிரவன் அவர்கள் தலைமை ஏற்கிறார். சங்க ஆண்டறிக்கையை முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் வாசிக்கிறார். இவ்விழாவின் சிறப்புரையை முனைவர் மா. சிதம்பரம் (இணைப்பேராசிரியர், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி) நிகழ்த்துகிறார். 


முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீசரசுவதி வித்யாசாலை தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழா தலைவர் சித. மெய்யப்பன் அவர்கள் தலைமையில்நிகழ உள்ளது. இவ்விழாவில் திரு. பெ. பழ.வி. பழ இராம வினைதீர்த்தான் அ்வர்கள் சிறப்புரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நன்றியுரையை திரு. இராம. பெரிய கருப்பன் ஆற்றுகிறார்.
பிற்கபல் 2.00 மணிக்கு ஸ்ரீசரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா நடைபெறுகிறது. விழாவின் தலைமையை திரு. மு,க. இராமசாமி செட்டியார் அவர்கள் ஏற்கிறார்கள். திருமதி மு. க. முத்தையா அவர்கள் பரிசு வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
இவண்
சரசுவதி சங்கத்தார். புதுவயல்
கருத்துரையிடுக