ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015

காரைக்குடி கம்பன் கழகத்தில் பாராட்டுவிழா

 சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் செல்ல கணபதி அவர்களுக்குக் கம்பன் அடிப்பொடி விருதளித்துக் காரைக்குடி கம்பன் கழகம் நேற்று மகிழ்ந்தது. கம்பன் அடிப்பொடி பெயரில் வழங்கப்படும் இம் முதல் விருதினைக் செல்லகணபதி என்ற கணபதி பெயருடையவர் பெறுவதே சிறப்பு. அதனை வழங்குபவர் முன்னாள் நிதி அமைச்சர் மாண்பமை ப. சிதம்பரம் அவர்கள். இதற்குப் பாராட்டுரை நல்கியவர் கவிஞர் சொ. சொ. மீ சுந்தரம் அவர்கள். கம்பனையும், அடிப்பொடியையும், செல்லகணபதியையும், நிதிஅமைச்சரையும் ஒருங்கு வைத்து அவர் பாராட்டிய முறை பாராட்டுரை, சிறப்புரை என் றஇரண்டுமாக அமைந்தது.
கருத்துரையிடுக