வெள்ளி, மே 18, 2012

கம்பன் விழா -மாதக்கூட்டம் அறக்கட்டளை

காரைக்குடி கம்பன் கழகத்தின் மாதக் கூட்டங்களின் ஆண்டு நிறைவை ஒட்டிச் சிறப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப் பெறும். திருபெரும்புதூர் வேதவல்லி அம்மாள் அறக்கட்டளை வழியாக நிகழ்த்தப்படும் இந்நிகழ்வு இவ்வாண்டு 2.6.2012 அன்று சனிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் நிகழஉள்ளது. என்னுடைய உரை இதில் இடம் பெறுகிறது. தலைமை முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து .இவரே நூலையும் வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார். கம்ப வானியல் என்ற நூலை வெளியிடும் இவ்விழாவிற்கு அனைவரும் வருக.
இரவு மாதக்கூட்டத்தின் வழக்கத்திற்கு ஏற்ப சிற்றுண்டி ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது.
கருத்துரையிடுக