திங்கள், ஜூன் 30, 2014

அகநம்பியின் ‘ பகைவனும் நண்பனே’ புத்தகம் பற்றிய விமர்சனம்

ஏன் எழுத வேண்டும்? எதற்காக எழுத வேண்டும்? எப்படி எழுதவேண்டும் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சொல்தான் பதில். அனுபவம். அனுபவித்ததை எழுதவேண்டும். மற்றவர்கள் அனுபவிப்பதற்காக எழுதவேண்டும். அனுபவித்தபடி எழுதவேண்டும். அனுபவங்கள் எழுதத் தூண்டும் ஊற்றுக்கண்கள். நம்பிக்கை வறட்சி ஏற்பட்டுவிடுகின்றபோது அனுபவ எழுத்து ஊற்றுகளே வாழ்க்கையை வளமாக்கும் அட்சயப் பாத்திரங்களாகி விடுகின்றன. அனுபவங்கள் மட்டும் வழிநடத்தினால் ஏராளமாய் எழுதலாம். கற்பனையாய், உண்மையாய், கவிதையாய், கதையாய் எழுதிக்கொண்டே போகலாம். வெற்றி அனுபவம், வீழ்ச்சி அனுபவம், தோல்வி அனுபவம், நம்பிக்கை அனுபவம் எழுத்து அனுபவம் என்று அனுபவச் சாலையாக விளங்குபவர் அகநம்பி அவர்கள். ‘‘தன்னம்பிக்கை ஒரு மூலதனம்’’ என்ற அவரின் முதல்நூல் என்னை அதிகம் சிந்திக்கவைத்தது. பலரை அந்நூலின் பக்கம் அழைத்துச் செல்ல வைத்தது. இந்த நூலின் வெற்றியை அவர் பறித்துககொண்டிருந்தபோதே அடுத்த நூலுக்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார். நம்பிக்கை அனுபவம் இந்த உலகிற்குத் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்பது அவருக்கு இந்தச் சமுதாயம் வழங்கியிருங்கின்ற நல்ல பணி. நல்ல கடமை. அந்த நல்ல கடமையை நிறைவாகவேச் செய்திருக்கிறார் அகநம்பி.
‘‘பகைவனும் நண்பனே’’ என்ற இந்த அனுபவ நூலில் ஆங்காங்கே அவரின் தன்னனுபவ நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்வுகள் படிப்பவர்க்கு அவரையும் அறிமுகம் செய்கின்றன. நூலுக்குள் வளத்தையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. தன்னனுபவத்தோடு, கேட்ட, பார்த்த, படித்த, ரசித்த, விமர்சித்த அனுபவங்களை ஒன்று கூட்டி சுவையான கலவையாகத் தந்துள்ளார் அகநம்பி அவர்கள்.
முதலாவதாக நட்பினைச் சொல்லிப், பகையை இடையில் வைத்து, மீண்டும் நிறைவில் நட்பின் திறம் சொல்லி முடிகின்றது இந்நூல். ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்வில் அருகிருந்து தரிசித்ததைப்போல அகநம்பி பகை பற்றிச் சொல்லிச் செல்கிறார். ‘‘மனித வாழ்க்கையில் எந்த பெரிய பதவியில் இருந்தாலும் சரி அடிமட்டத்தில் உள்ள நபராக இருந்தாலும் சரி அவரவர் தகுதி ஏற்ப பகைவன் அல்லது எதிரி என்ற தவிர்க்கவே முடியாத நபர் நிச்சயமாக இருப்பார். இருந்தேயாக வேண்டும் என்பது யாராலும் மாற்ற முடியாத இயற்கையின்; விதி’’ என்ற கருத்தைப் படிக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிரிகள் என்று புலம்பும் நமது மனத்திற்கு நமக்கு மட்டுமல்ல எதிரிகள் ….. எல்லாருக்கும்தான் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்தகம் சொல்லுவதாகக் காதுகளுக்குக் கேட்கின்றது.
பகைவர்களும் நண்பர்களே…. நண்பர்களும் பகைவர்களே….. இதுவே பகையின் விநோதம். ‘‘பகைவன் என்பவன் வேறு யாரும் அல்ல… அவர் நமது முன்னாள நண்பரேதான்… நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இணையாக நம்மோடு கைகோர்த்தும் நமது தோளில் ஆறுதலாகக் கைபோட்டும் நடந்து வந்த நண்பர் என்றாவது ஒருநாள் அதில் இருந்து மாறுபட்டு செயல்படும்போது அங்கே நட்பு பகையாகின்றது’’ என்ற தெளிவு பகை, நட்பு என்ற இரண்டுக்கும் உள்ள தொடர்பின் ஆழத்தை எடுத்துக்காட்டுகின்றது.
பகை பற்றிய ஒரு நல்லத் திறனாய்வு இந்நூல். பகையின்றி வாழும் பாடத்தை இந்நூல் நமக்குச் சொல்லித்தருகின்றது. எத்தனை நூல்கள் படித்தாலும் எத்தனை சொன்னாலும் பகை வந்துவிடுகிறதே என்றால் அந்தப் பகையையும் முன்னேற்றத்திற்கான வழியாக இந்நூல் காட்டும் புதிர் அனுபவத்தை அகநம்பி அவர்களி;ன் வார்த்தைகள் கொண்டு கற்றாலே விளங்கிக்கொள்ள இயலும்.
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது என்று இராமனுக்கு அறிவுரை சொன்னார் வசிட்டர். இதனைக் கற்றுக் கொண்டு உலகமெல்லாம் நடந்த இராமனுக்கும் அளப்பரிய பகை வந்து சேர்ந்தது. பகை தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அதனால் தளர்ச்சியடையாமல் வாழவேண்டும் என்று கற்றுத் தருகின்ற அருமையான நூல் இந்தநூல்.
இனிய பேச்சுககாரர் அகநம்பி. இனிய சொற்களுக்குச் சொந்தக்காரர் அகநம்பி. இனிய நடைக்கும் அவரே சொந்தக்காரர். அவர் மனித குலத்திற்கு ஒரு நன்னம்பிக்கை முனை. அவரை நம்பி இந்த உலகம் நம்பிக்கை நடைபோடட்டும். நாளும் வெற்றிகள் வந்து சேரட்டும்.

(பகைவனும் நண்பனே – ஆசிரியர் அகநம்பி, விலை ரூ.120. கோசலை நினைவு அறக்கட்டளை, இயற்கை சக்தி பப்ளிகேசன்ஸ், புன்னமை கிராமம். சீவாடி கிராமம், காஞ்சிபுரம்மாவட்டம், 9585480754

கருத்துகள் இல்லை: