திங்கள், ஜனவரி 27, 2014

முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் சிவஞான போத விளக்கவுரை குறுந்தகடுவெளியீட்டுவிழா

நேற்று (26.1.2014 ) அன்று காலை சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த வகுப்பு 2012-13 ஆம் ஆண்டு பயின்றவர்களின் தகுதிவிழாவும் 2014 ஆம் ஆண்டு சேர்க்கை விழாவும் இனிதே நடைபெற்றது.
கடந்த பத்தாண்டுகளாகச் சீரும் சிறப்புமாக இயங்கிவரும் இவ்வகுப்பில் தற்போது 400 பேர்மாணவர்களாகச் சேர்ந்துள்ளனர். இவ்வகுப்பின் விளக்கவுரை வழங்கிவரும் பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்களுக்குக் குருகாணிக்கை வழங்கிய நிகழ்ச்சி நடந்தது. அதன் காட்சிகளைக் காணுங்கள்.
மேலும் சிவஞானபோத விரிவுரையை குறுந்தகடு வடிவில் வெளியிட்ட நிகழ்வும் நடைபெற்றது. திரு சாரதி அவர்கள் முனைவர் பழ.முத்தப்பன் வழங்கியுள்ள எட்டுமணிநேர விளக்கவுரை அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார்கள். மற்றவர்கள் பெற்றுக்கொள்ள இம்மையத்தின் செயலர் அருள்நெறித் தொண்டர்கள் செங்குட்டுவன், சேகர் ஆகியோர் இதற்கு ஆவன செய்துமகிழ்ந்தார்கள்.

சிவஞானக் கல்வி தழைக்க இம்முயற்சி பெரிதும் உதவும்

3 குறுந்தகடுகள் அடங்கிய இத்தொகுப்பு விலை ரூபாய் 250 என்றாலும் 200 கிடைக்கும்.கருத்துரையிடுக