திங்கள், ஜூன் 08, 2015

வெற்றிக்கொக்கு

11216346_840352649352269_429205382_n
வல்லமை இதழில் வெளியான புகைப்படக் கவிதைப் போட்டி பதினைந்தில் கலந்து  கொண்ட என் கவிதை

நீரலை
காற்றலை
இரண்டடிலும் அலையும் கொக்கு
காற்றின் சாட்சி
நீரின் காட்சி
வெள்ளை
நீலம்
இரண்டும்  நெகிழும்  நீர்வழி
கடலும் வானும்
கலக்கும்  பெருவெளி
காத்திருப்பும் முயற்சியும்
ஒன்றில் ஒன்று தொடரும்
வெற்றிடக் கொக்கு
ஒரே தாவலில்
வெற்றிக் கொக்காய் மாறும் தருணம்
எதுவும்
எழுந்தால்
இருக்கும் இடம் விட்டுப்
 பறந்தால்
சுகம்
உயரும்
உயரம்
காற்றின் விசிறி
கொக்கின் சிறகு
காலத்தின் பறத்தல்
நீரின் வேர்வை
குமிழும் குமிழி
முன்னும் பின்னும்
தொடரும் தொடர்க்காட்சிகள்
துண்டாய் நிற்கும்
புகைப்படம். 

பரிசுக்கு உரியதாக இக்கவிதை இல்லை என்றாலும் நல்ல விமர்சனத்தைத் தந்துள்ளது. 
யற்சி செய்து மேலே பறந்தால் ’வெற்றிடக் கொக்கும் வெற்றிக் கொக்காகும்’ என்று நயமிகு வார்த்தைகளால் நம்பிக்கை ஊட்டுகிறார் திரு(மிகு). பயணி. (பெயரைப் ’பயனி’ என்று பிழையாக எழுதியிருக்கிறீர்கள்.)
…வெள்ளைநீலம்இரண்டும்  நெகிழும்  நீர்வழி
கடலும் வானும்கலக்கும்  பெருவெளி
காத்திருப்பும் முயற்சியும்ஒன்றில் ஒன்று தொடரும்வெற்றிடக் கொக்குஒரே தாவலில்வெற்றிக் கொக்காய் மாறும் தருணம்
எதுவும்எழுந்தால்இருக்கும் இடம் விட்டுப்பறந்தால்சுகம்…


பயனி என்பது நான் கவிதை எழுதுகையில் சூட்டிக்கொண்ட பெயர். பழனியப்பன் என்ற பெயரில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே உருவாக்கப்பெற்ற என் புனைப்பெயர். எனவே சரியும் தவறும் என்னைப் பொறுத்தது. பயன் பெற்றவர் பயனி. 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சங்ககால கல்வி முறை