புதன், ஆகஸ்ட் 13, 2014

புதுவயல் ஸ்ரீ சரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கூடுதல் கட்டிடத் திறப்புவிழா

காரைக்குடிக்கு அருகில் அமைந்துள்ள ஊர் புதுவயல். இவ்வூரில் அரிசி ஆலைகள் அ்திகம். இங்குள்ள ஸ்ரீ சரசுவதி சங்கம் மிகப்பழம்பெரும் இலக்கிய அமைப்பு. இவ்வமைப்பில் செக்கிழுத்த செம்மல் வ. உ.சிதம்பரனார் வந்து பேசியுள்ளார். பல தமிழ்ச்சான்றோர்களும் பேசியுள்ளனர்.
இச்சங்கத்தின் துணை அமைப்புகளாக ஸ்ரீசரசுவதி வித்யாசாலை தொடக்கப்பள்ளிக் கூடம், ஸ்ரீ சரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியன இயங்கி வருகின்றன. இப்பள்ளியின் வளர்ச்சிக்கு 2014 ஆம் ஆண்டு ஒரு மைல்கல்.
சரசுவதி வித்யாசாலை பெண்க...ள் மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல கட்டிடங்கள் இப்போது எழுப்பப்பெற்றுள்ளன. அவற்றின் திறப்புவிழா செப்டம்பர் ஒன்றாம் தேதி மாலை நான்கு மணி அளவில் நடைபெற உள்ளது. அழைப்பிதழை உங்கள் பார்வைக்காக இதனுடன் இணைத்துள்ளேன்.
அன்பர்கள் அனைவரும்
வருக.
கொடையாளர்கள் தந்த கொடையால் இப்பள்ளி இவ்வாண்டு பெருவளர்ச்சி பெற்றுள்ளது. தனி நூலகம், வகுப்பறைகள், கலையரங்கம் என்று வளர்ச்சி பெற்றுள்ள இப்பள்ளியின் கூடுதல் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அனைவரும் வருககருத்துரையிடுக