புதன், ஜூன் 13, 2012

புதிய தலைமுறை தொலைக்காட்சித் தொடருக்கு உதவிய என் எழுத்துகள்

புதிய தலைமுறை தொலைக் காட்சியில் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு என்ற நிகழ்ச்சியில் நகரத்தார் பற்றிய வரலாறு சில வாரங்களாக இடம் பெற்றது. அதில் நன்றி என்ற வகையில் முனைவர் மு. பழனியப்பன் என்ற பெயர் இடப் பெற்றது. இதன் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திரு முகில் அவர்களுக்கு இது குறித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவருடன் கலந்து கொண்ட மின் அஞ்சல் பகுதிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------

 2012/6/11 Palaniappan M <muppalam2006@gmail.com>

அன்பு முகில் அவர்களுக்கு

வணக்கம்
நகரத்தார் சமூகத்தைப் பற்றியும் அவர்கள் வரலாறு பற்றியும் அவர்கள் உணவுமுறை பற்றியுமான புதிய தலைமுறைத் தொலைக்காட்சித் தொடர் பார்த்து வருகிறேன். நல்ல படைப்பு. கச்சிதமான தகவல்கள், காட்சிகள்

நன்றி பகுதியில் முனைவர் மு. பழனியப்பன் என்ற பெயர் இடம் பெறுவதாக நண்பர்கள் சொன்னார்கள்.

இந்த நன்றிக்குரியவராக நான் இருக்க முடியுமோ என்ற ஐயம் எனக்கு.
முனைவர் மு. பழனியப்பன் என்ற பெயரில் நகரத்தார்கள் பற்றிய சில கட்டுரைகளை இணையப் பக்கங்களில் எழுதிவருகிறேன். அவ்வகையில் என் உதவி உங்களுக்குப் பயன்பட்டிருந்தால் மகிழ்ச்சி.
அல்லது வேறு யாராவது இதே பெயரில் இருந்தால் அவருக்கும் என் பாராட்டுகள்
தங்களிடமிருந்து பதில்எதிர்பார்த்து

 என்னுடைய கட்டுரைகள்
நகரத்தார் குலம் வாழ ஐந்து பாடலகள்
நகரத்தாரும் ஆன்மீகமும்
நகரத்தார் உறவு முறைப் பெயர்கள்
--

 --------------------------------------------------------------------------------------------------------

siva mugil mugil.siva@gmail.com
ஜூன் 12 (2 நாட்களுக்கு முன்பு)

பெறுநர் எனக்கு

வணக்கம் சார்,

அந்த நன்றி தங்களுக்கு உரியதே.
தாங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் உதவிகரமாக இருந்தன. குறிப்பாக, நகரத்தார் குலம் வாழ ஐந்து பாடல்கள் - கட்டுரையில் சில தகவல்களை கடந்த வார நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டேன். தங்களது தொடர்பு எண் என்னிடம் இல்லை. இருந்தால் முறைப்படி தகவல் கூறியிருப்பேன். மன்னிக்கவும்.

தங்கள் வாழ்த்துகளுக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி.


அன்புடன்
முகில்.

கருத்துரையிடுக