வியாழன், ஆகஸ்ட் 24, 2006

சிறுபிள்ளைத்தனம்


சிறுகுழந்தையைக்
கவனித்துக் கொள்வது சிரமம்தான்

பீர்பால் வீட்டிலும்
இந்தக் கதைதான் நடந்ததாம்

குழந்தை பீர்பாலிடம்
அப்பா அக்பர் தோற்ற கதை
இதுபோல நிறைய உண்டு

வார்த்தைக்கு வார்த்தை
வி¬ளாயட்டு காட்டினாலும்
அழுகைக்கு அளவில்லை

வேளைக்கு வேளைசோறு ஊட்டினாலும்
மெல்லிய தேகம்தான்

புதிது புதிதான
விளையாட்டுப் பொருட்கள்என்றாலும்கூட
சமாதான நிலவாது

வகை வகையான சட்டைகள்என்றாலும்கூட
திருப்தி வாராது

கடைக்குச் சென்றால்
நிச்சயம் இனிப்பு
நமக்குக் கசப்புதான்

வேண்டும் என்றாலும்
வேண்டாம் என்றாலும்
குழந்தையின் அழுகை
சங்கீதமாய்
ஏற்கும் நிலைவரவேண்டும்.
கருத்துரையிடுக