புதன், மார்ச் 01, 2006

Ecs அதாவது எழவெடுக்கும் சிக்கலான சிஸ்டம்


இது ஒரு நல்ல முறை என்று நான் தேர்ந்தேன். சென்னையில் குடியேற ஒரு நான்கடுக்கு வீடு. இதனை வாங்க படாத பாடு பட்டு கடன் வாங்கினேன். இந்தக் கடனை மாதந்தோறும் செலுத்த என் சேமிப்புவங்கிக் கணக்கு உள்ள வங்கியில் எழவெடுக்கும் சிக்கலான சிஸ்டத்தில் சேர்ந்தேன். பத்து மாதங்கள் எல்லாம் ஒழுங்காய்த்தான் இருந்தது. நடந்தது. கடன் வாங்கிய நிறுவனத்திற்கு மாதம் 10ம் தேதியானதும் பணம் போய்ச் சேர்ந்தது. ஆனால் இந்த வரி மாதம் இருக்கிறதே அதாவது பிப்ரவரி இன்கம்டாக்ஸ் வரி மாதம் இந்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் என் தொலைபேசி அபாய மணி அடித்தது.

கடன் வாங்கிய நிறுவத்தில் இருந்து ஒரு பெண் குரல். சார் நீங்க இந்த மாதம் பணம் கட்டடலையா. என்று கேட்டது அந்தப் பெண்குரல். இல்லையே கட்டிவிட்டேனே. நேற்று கூட ஏடிஎம் சிறு அறிக்கையில் பணம் எடுக்கப்பட்டுவிட்டதாகக் காட்டப்பட்டதே என்று அதிர்ந்தேன். அந்தப் பெண் அப்படியா உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்த்துவிட்டு பணம் எடுக்கப்பட்டு இருந்தால் அதனை ஒரு ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு மெயின் ஆபிஸ் சென்று பாருங்கள் என்றார். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதைத்தது.
நானும் திங்கட்கிழமை காலையில் அலுவலகத்தில் பர்மிசன் வாங்கிக் கொண்டு வங்கி சென்றேன், அங்கே பணம் டெபிட் ஆயிருந்தது. அதனை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு மேற்படி கடன் தந்த நிறுவனத்திடம் சென்று காட்டினேன், அவர்கள் சார் எங்களுக்குப் பணம் வரவில்லை, இதோ பாருங்கள் என்று கடன் கட்டாதவர் பட்டியலில் என்பெயர் இருப்பதை ஜெராக்ஸ் தந்தார்கள். ஆகா ஜெராக்ஸ் வசதி வந்தாலும் வந்தது. எல்லோரும் சான்று தருகிறார்கள். ஆகா இதுவல்லவோ மகத்தான உலகம்
சரி என்று மீண்டும் வங்கிக்குப் படையெடுத்தேன். அங்க சென்றதும் அவர்கள் ஆமாம் சார் பிப் 10ம் தேதியில் ஒரு தொகை மட்டும் திருப்பி எங்களுக்கே வந்துவிட்டது. அது உங்கள் தொகையாக இருக்கலாம் என்று கூறினார்கள். பிடித்தது ஏழரை நாட்டுச் சனி, அது என் பணமே தான். கூடுதலாக அனுப்பிவிட்டதாக சர்வீஸ் பிரான்ஜ் திருப்பி அனுப்பியிருந்தது. அதனை மீண்டும் ஒரு பையில் கட்டி மேற்படி வங்கி சர்வீஸ் பிரான்ஜ்க்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. சரிதான். இப்போ பணம் எங்கே இது யாருக்குத் தெரியும்

எனக்கு நேரே போன் பேசினார்கள் சண்டை போட்டார்கள் ,,,, ஆனால் பணம் அவ்வளவுதான்யார் மேல் தவறு தெரியாது நான் எழுதித்தந்தேன்.

அதற்குள் கடன் தந்த உயிரைக் காப்பீடு செய்யும் நிறுவனத்தின் சகோதரி நிறுவனம் என் உயிரையும் என் மனைவியின் உயிரையும் சேர்த்து வாங்க போன் மேல் போன் பேசியது. அலுத்துப் போய் கடன் வாங்கி பிப் மாதத் தொகையையும் அதற்கு தண்டமாக ரூ 321 ஐயும் கட்டி என் உயிரையும் மனைவி உயிரையும் காப்பாற்றினேன். இதில் வேடிக்கை என்னவென்றால் ECS வழங்கும் வங்கிக்குக் கட்டணமாக ருபாய் 120 தண்டம் கட்டியிருக்கிறேன்.
இன்னும் எனக்குப் பிப்ரவரி மாதத்தவணை என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. யாராவது பையில் பணம் பார்த்தால் என் கையில் தாருங்கள். இந்தத் தொல்லையைத் தந்தது பேர் போன ஒரு வங்கி. அந்த வங்கி மாநில வங்கி. மைசுர் ஹைதராபத் போன்ற மாநில பெயரில் துணை வங்கிகளும் அதற்கு உண்டு
நாட்கள் நகர்ந்தபின் கன்சுயுமர் கோர்ட் செல்ல வேண்டும். கன்சுயுமர் கோர்ட்டில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் இமெயில் செய்யுங்கள்
ஆனாலும் இன்னும் பணம் அவ்வளவுதான்

2 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

விடாதீங்க. நீங்க அதிகப்படி பணம் கட்டியதும் தேவை இல்லாதது. டோண்டு சாரிடம் உதவி கேளுங்கள்.

palaniappan சொன்னது…

தங்களின் பதிலுக்கு நன்றி
நானும் டோண்ட்டு அவர்களைத் தொடர்புகொள்கிறேன்.
ஆனாலும் வங்கியில் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
தந்திடுவோம் சார்
எங்க கிட்ட இருந்தா பணத்த தந்திடுவோம் சார்
இதுதான் இதுவரை கிடைத்த பதில்

இன்னும் ஐந்து நாள் கழித்தபின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்,