புதன், மார்ச் 15, 2006

உ.வே.சா உரைநடை நூல்கள் வெளியீடு

11.3.2006 சனிக்கிழமை மாலை சென்னை பாரதீய வித்யாபவன் சிற்றரங்கில் நடைபெற்ற உ. வே. சாவின் உரைநடை நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். குறித்த நேரத்தில் தொடங்கிய விழா. பல தமிழறிஞர்களால் நிறைந்த விழா, நிறைவான விழா.

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள உ. வே. சா நூல்நிலையத்தில் பாதுகாக்கப் பட்டு வரும் 61 கட்டு சங்க இலக்கிய ஓலைச்சுவடிகளை குறுவட்டுகளாகச் சேமித்துத் தந்துள்ளார்கள். இதன் வெளியீட்டுவிழாவும் இதனோடு நடைபெற்றது. இவ்வட்டுக்களில் சாமிநாதையர் நூல்நிலையத்தில் உள்ள சுவடிகள் மின்படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மின்படி எடுப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பிரெஞ்சு நிறுவனத் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் இவான் என்ற பெண்மணி எடுத்துரைத்தார். அவர் திரையில் கணினி வழி காட்டிய ஏட்டுப்பிரதிகள் செல்லரித்துப் போயிருந்தன. உடைந்து செல்லோடேப் இடப்பட்டு படி எடுக்கப் பட்டிருந்தன. இது போன்ற பல இடர்பாடுகள். இவற்றை அழியாமல் காத்த பெருமையை புதுவை நிறுவனத்திற்கு உரியது. அதன் இயக்குநர் ஒரு கணினியையும் அன்பளிப்பாக நூலகத்திற்கு அளித்தார். வாழிய தமிழ்.

மேலும் புதுவை பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய நாட்டு ஆகம ஏட்டுப்பிரதிகள் யுனெஸ்கோ நிறுவனத்தால் மிகப் பழமையான ஏட்டுச்சுவடிப் பதிவுகள் எனப் பாராட்டப் பட்டுள்ளன.

உ.வே.சா பல தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர். தமிழ்த்தாத்தா எனப் புகழப்படுபவர். இவரின் இலக்கியத்தேடல் அனுபவங்கள் பல இவரது உரைநடை நூல்களில் வெளியிடப்பெற்றுள்ளன.
இவரது உரைநடைக்கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் கும்பகோணம் கல்லூரியும், சென்னை பிரஸிடென்சி கல்லூரியும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

வெளியீட்டுவிழாவில் உ.வே. சா உரைநடை நூல் தொகுப்புகள் (நான்கு தொகுதிகள்) ரூபாய் 350க்குக் கிடைத்தது. அதன் விலை 475நானும் அங்கு இங்கு கடன் வாங்கி வாங்கிவிட்டேன். படித்துக் கொண்டிருக்கிறேன்.

2 கருத்துகள்:

writerpara சொன்னது…

நூல்களைப் பதிப்பித்தவர்கள் யார்? எந்தப் பதிப்பகம் / அல்லது உவேசா நூல்நிலையமே வெளியிட்டிருக்கிறதா என்கிற விவரம் தர வேண்டுகிறேன்.

நன்றி.

பாரா

palaniappan சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
உ.வே. சா உரைநடைநூல்கள் தொகுதிகள் 4
திரு. மா.வே. பசுபதி உள்ளிட்ட மூவர் குழு அதன் பதிப்பாசிரியர்கள்
உ. வே. சா நூல்நிலையமே வெளியிட்டுள்ளது.
மு. பழனியப்பன்,