திங்கள், பிப்ரவரி 01, 2016

காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றோர் விபரம் பின்வருமாறு. (2016)

          கம்பன் கழகம், காரைக்குடி  
                     செய்தி அறிக்கை      நாள்: 1-2-2016

                வணக்கம். நேற்றைய தினம் 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின் அனைத்து கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன. அது பற்றிய கீழ்க்காணும் செய்தியினை தங்கள் மேலான செய்தித் தாளில் வெளியிட்டு வெற்றி பெற்ற கல்லூரி , பள்ளி மாணாக்கர்கள் பரிசுகளை நேரில் வந்து பெற்றுச் செல்வதற்கு உதவிடுமாறு மிக்க பணிவன்புடன்  வேண்டுகின்றோம்.

                28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்று, கீழ்க்கண்டவர்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.

                கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு ஷாஜஹான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (ரு 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (ரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இரா. நாச்சாள் திருக்குறளில் முதற் பரிசினையும்  (ரூ 3500), கம்பராமாயணத்தில் இரண்டாம் பரிசினையும் (ரூ1000) வென்றார்.

                ஊக்கப் பரிசுகளை ( தலா ரூ750) பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி பத்மாராகவி, கைக்குறிச்சி பாரதி கலைக் கல்லூரி சு.சுந்தரவள்ளி, ம.கௌசல்யா, பெங்களூரு ஐ.ஐ.எஸ் திருமூலநாதன், கிருஷ்ணன்கோவில் வி பி எம் எம் மகளிர் கல்லூரி க.வைரமணி ஆகிய  ஆறு பேர்களும் பெற்றனர்.

                பள்ளிகளுக்கான  கம்பராமாயண ஒப்பித்தல் போட்டியில் காரைக்குடி கலைவாணி பள்ளி ம.பானுப்பிரியா, தேவகோட்டை முருகானந்தா நடுநிலைப்பள்ளி சு.அருண்குமார் இருவரும் இரு முதற்பரிசுகளையும் (தலாரூ 1,000),

                தேவகோட்டை புனிதஜான் பள்ளி த.மகாலெட்சுமி, திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா பள்ளி மு.மீனாம்பாள், கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி சுப. கோமதி, ,காரைக்குடி கலைவாணி பள்ளி ம.சண்முகப்பிரியா, ஸ்டெனிஸ் செரின், க.சுபலெட்சுமி, பீ.ஜோசி அபர்ணா, சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி பள்ளி த.ஹரிணி, புதுவயல் வித்யாகிரி பள்ளி வெ.சௌந்தர்யதர்ஷினி, கோ.அபிராமி, கூத்தலூர் புனித செபஸ்தியார் பள்ளி ஜ.கோகிலவாணி, காரைக்குடி ஆசாத் பள்ளி செ.கலைமணி,ஆகிய  பன்னிரண்டு பேர்களும்  இரண்டாம் பரிசுகளையும் (தலா ரூ 250),

                கீழச்செவல்பட்டி மீ சு பள்ளி மா.ஜெகன், கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி பி மதிவதனி, தேவகோட்டை புனிதஜான் பள்ளி அ.தனலெட்சுமி, கானாடுகாத்தான் மு சித மு சிதம்பரம் செட்டியார் பள்ளி ரா.மணிகண்டன், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா பள்ளி மா. சத்யா, சிங்கம்புணரி,அன்னை வேளாங்கண்ணி பள்ளி சு.சிநேகவர்ஷினி ஆகிய ஆறு பேர்களும் ஊக்கப் பரிசுகளையும் பெற்றனர்.

                                                                                                 கல்லூரிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு.ராஜாராம், சே செந்தமிழ்ப்பாவை, இராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியர்கள் செ.நாகநாதன், இரா.கீதா, குழிபிறை முனைவர் வீ,கே. கஸ்தூரிநாதன், பேராசிரியர் பா தட்சிணாமூர்த்தி ஆகியோரும் பள்ளிகளுக்கு பொன்னமராவதி நல்லாசிரியர் நா திருநாவுக்கரசு, திருப்புத்தூர் சி உஷா, அழகர்கோவில் ஆ.பழனியாயி, மதுரை சு.தொண்டியம்மாள் ஆகியோரும் நடுவர்களாகப் பணியாற்றி பரிசுக்குரியோரைத் தேர்ந்தெடுத்து உதவினர்.

                                                        
                 பரிசுகள் மார்ச் மாதம் 21 ஆம் நாள் திங்கள்கிழமை மாலை  காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன் திருவிழாவின் முதல் நாளில் மாணாக்கர்களுக்கு வழங்கப்பெறும்.

                  தாங்கள் இதுகாறும் எங்கள் பணிகளில்  காட்டி வந்த உதவிக்கும் ஊக்கத்திற்கும், எங்கள் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் புலப்படுத்திக் கொள்ளுவதோடு, இனியும் தொடர்ந்து இத்தகு உதவியை தொடர்ந்து நல்கவும்  அன்புடன் வேண்டிக் கொள்ளுகின்றோம்.



                                                      பழ பழனியப்பன்
                                                செயலாளன், கம்பன் கழகம்

                                                   கைபேசி: 94450 22137

கருத்துகள் இல்லை: