இணையப் பரப்பில் எழுதுவதில் பற்பல மகிழ்ச்சிகள் ஏற்பட்டதுண்டு. அப்படி ஒரு மகிழ்ச்சி இன்றைக்கு
என்னுடைய ஆண்- பெண் எழுத்தில் உள்ள வேறுபாடு பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் எழுதியுள்ள கருத்துரையை இதனுடன் இணைத்துள்ளேன்.
KAKKAIPPAADINIYAAR - TAMIL WOMEN POET -SOME DETAILS
மாயை எனும் மயக்கம் மருண்டோடிட வேண்டும் நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். மதுரை மாநகராட்சிப் பள்ளி ஒன்றுக்கு காக்கைப்பாடினியார் பள்ளி என்று பெயர் உண்டு. யார் இவர் என்று யோசிப்பேன். ஆனால் இன்று வலைத் தள உலாவின் போது காக்கைப் பாடினியார் பற்றி அருமையான அற்புதமான தகவல் கிடைத்தது. தமிழ் உலகம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும் மதுரையின் மைந்தர்கள் அறிந்து பெருமைப்பட வேண்டும் என்பதற்காகவும் அந்தக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு தருகிறேன். கட்டுரை வெளி வந்த தளம் http://thamizmandram.blogspot.com/
அந்த தளத்திற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அந்த கட்டுரையை அதைப் பதிவு செய்தவர் பெயருடன் தருகிறேன். மதுரையில் வசிப்பவர்களுக்கு சில பள்ளிகளுக்கு புலவர்கள் பெயர் வைத்தால் இளங்கோ - உமறுப்புலவர் - அவ்வை போன்று சில புலவர்கள் பெயர் அடிக்கடி நினைவு வருகிறது. இல்லாவிடில் நமக்கு வள்ளுவரையும் கம்பரையும் பாரதியையும் பாரதிதாசனையும் விட்டால் அதிகமாக புலவர் பெயர்கள் தெரியாது.இந்தப் பதிவினை முனைவர் வாசுதேவன் அவர்கள் அரும்பாடு பாட்டு நமக்கு கொடுத்து இருக்கிறார். கட்டுரையை தந்த முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,மா மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை அவர்கள் ஆண் கவிகளுக்கும் பெண் கவிகளுக்கும் கருத்தை வெளியிடுவதில் சில வேறுபாடுகள் உள்ளது எனவும் உலகெங்கும் இது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்றும் தகவலைக் கூறி பெண்கவியான காக்கைப் பாடிநியாரைப் பற்றிய தனது பதிவினை இவர் தந்து உள்ளார். படித்துப் பயனடையுங்கள். இந்த அருமையான கட்டுரையை நமக்கு வடித்துத் தந்தவர் முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,
மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
இவரின் தமிழ் தொண்டு மிகச் சிறப்பானது. இவருக்கு மிக்க நன்றி.
பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை
முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
*******************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக