புதன், பிப்ரவரி 21, 2007

அப்பாக்கள் + அம்மாக்கள் = குழந்தைகள்

எல்லாக் குழந்தைகளும்
ஒரே இயல்பின போலும்

செருப்புகளை
அவை மிகச் சரியாக
மாற்றிப் போடுகின்றன

அம்மா அப்பா
சொல்லித் தருவதற்குள்
முந்திக் கொள்கின்றன

அப்பாக்கள்
அலுவலகம் கிளம்பும் போது
அழுகின்றன

அம்மாக்கள்
சமைக்கும்போது
இடுப்பில் தூக்கி வைத்துக்
கொள்ளச் சொல்கின்றன

தொலைபேசியில்
பேசிக் கொண்டிருக்கும்போது
பிடுங்குகின்றன

உண்ணும் தட்டில்
கால் கை வைக்கின்றன

எரிச்சலை மீறி
அவை செய்வதைக்
காணும் போது பெருமிதமாகத் தான் இருக்கிறது

சின்னவயதில்
அப்பாக்கள்
அம்மாக்கள்
அவரவர்
அப்பா
அம்மாவை
எரிச்சலூட்டச்
செய்த சிறு விளையாட்டுக்கள்
அடங்களின்
மொத்த வடிவம் அவையோ
கருத்துரையிடுக