வெள்ளி, நவம்பர் 24, 2006

பதவி படுத்தும் பாடு

மேலே ஒரு நாற்காலி
இருக்கிறது அது பரம சக்தி வாய்ந்தது
இந்த நினைப்பில்
அதில் அமர்ந்தவர் முதலாளியாகிறார்

அவர்
அன்று முதல்
பொன் கரண்டியில்
உணவு அருந்துவதாக எண்ணம்

உடையில் மாற்றம்
என்றைக்கோ தைத்த
வெள்ளை நாகரீக ஆடை
எல்லாம் இன்றைக்குத் தூசி தட்டப் பட்டது

புளிமூட்டை கணக்காய்
ஆடைக்குள் சரீரம்

வரும் வண்டி மாறுகிறது
எல்லாம் தலைகீழ்

அதுவரை உடன் பணிபுரிந்தவர்கள்
அடிமைகளாகிறார்கள்
அவர்களுக்கு
சுயசிந்தனை இருக்கக் கூடாது
பேசக்கூடாது
எது செய்தாலும்
அவருக்கு எதிரானதாக அது இருக்கலாம்

பக்கத்தில் இரு பெண் கைவிசிறிகள்
அவர்களுக்குக் கை வலிக்கிறதோ இ¢ல்லையோ வீசிவிடும் செய்திகளுக்கு வலிக்கிறது நரம்பு

இப்படிப் பதவி ஆசைக்கு
பரிதவிக்கும் பண்டிதர்களுக்கு
உலகம் அவர்களுடையதாய் இருப்பதாய் எண்ணம்

பதவிகள்
பிறர் மரியாதையை ருசிபார்க்கின்றன

அதன் விளைவு போகப் போகப் புரியும்
பதவிகள்
சற்றுநேர காய்ச்சல்
அதற்கு மருத்துவர்கள் தேவை

மீறிப் போனால்
உயிரற்ற நாற்காலி கௌரவம்
எத்தனை நாளைக்கு

1 கருத்து:

இவன் சொன்னது…

//புளிமூட்டை கணக்காய்
ஆடைக்குள் சரீரம்

வரும் வண்டி மாறுகிறது
எல்லாம் தலைகீழ்

அதுவரை உடன் பணிபுரிந்தவர்கள்
அடிமைகளாகிறார்கள்//

இவை அனைத்தும் உன்மை. உன்மையை தவிர வேறுஒன்றும் இல்லை.

நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் முனைவரே.