நிகழ்வு

செம்மொழித் தமிழாய்வு நிறுவனமும் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மணிமேகலை கால சயமங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும் பயிலரங்கின் அழைப்பிதழ்

மார்கழி மாத தேய்பிறை அட்டமியில் தேவகோட்டையில் நடைபெற்ற ஐம்பெருங்கடவுளர் வீதியுலாத் திருக்காட்சிகள்
அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் செம்மொழிஇலக்கியக் கருத்தரங்கில் கட்டுரைவாசித்தல்

இன்று(8.1.2014 ) அன்று காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மூன்று நாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. செம்மொழி மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் நடைபெறும் இந்நிகழ்வில் காலை அமர்வில் ‘‘சங்க காலச் சமுதாயத்தின் மதிப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

செம்மொழி  இலக்கியங்கள் கற்றல் கற்பித்தலுக்கான இணைய தளங்கள்  - பயிலரங்க உரை

நேற்று (7--1-2014) சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாகநடைபெற்று வரும் பயிலரங்கில் செம்மொழி இலக்கியம்கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணையதளங்கள் என்ற தலைப்பில் பயிற்றுவித்தேன்.

காரைக்குடி கம்பன் கழக டிசம்பர் (2013) மாதக் கூட்டம்

 நேற்று (7.12.2013 ) மாலை ஆறுமணியளவில் காரைக்குடி கம்பன் கலையரங்கில் கம்பன் கழக டிசம்பர் மாதக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கூத்து மரபுகளும் கம்பராமாயணமும் என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர கி. பார்த்திப ராசா ( தூய நெஞ்சகக் கல்லூரி, திருப்பத்தூர். வட ஆற்காடு மாவட்டம்) அவரகள் உரையாற்றினார். அரங்கு நிறைந்த கூட்டத்தில் ராமாணயத்தின் கூத்து வடிவங்கள்தமிழகத்தில் கேரளாவில் பதிந்து கிடப்பன குறித்த பல அரிய செய்திகளைத் தொகுத்துரைத்தார். கம்பன் விழாக்களின்ஈரப்பால் அவர் தமிழ் கற்க வந்ததைக்குறிப்பிட்டார். இவரது உரையின் ஊடாக சுவைஞர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் நிகழ்ந்தது. மிக்க பயனுள்ள நிகழ்வுசிந்தனை நந்நவனம்
16.11.2013 அன்று குன்றக்குடி திருமடத்தில் தவத்திரு அடிகளார் தலைமையில் ‘‘ எற்றன்று இரங்குவ செய்யற்க ’’ என்ற தலைப்பில் சிந்தனை நந்தவனத்தில் உரையாற்றினேன்.
வினைத் தூய்மை பற்றிய செய்திகளைத் தொகுத்துரைக்கும் அருமையான வாய்ப்பு.

வினை நலம் வேண்டுவ எல்லாம் தரும். 


கருத்துகள் இல்லை: