உலகத் திருக்குறள் பேரவையின் மாநில மாநாட்டினை ஒட்டி நடத்தப்படும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு . இதனைக் காணும் மாணவர்கள் இதனையே அறிவிப்பாகக் கொண்டு தங்கள் கல்லூரி வழியாகவும் கட்டுரைகளை அனுப்பலாம்
சனி, நவம்பர் 26, 2011
உலகத் திருக்குறள் பேரவை மாநிலகட்டுரைப் போட்டி
உலகத் திருக்குறள் பேரவையின் மாநில மாநாட்டினை ஒட்டி நடத்தப்படும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு . இதனைக் காணும் மாணவர்கள் இதனையே அறிவிப்பாகக் கொண்டு தங்கள் கல்லூரி வழியாகவும் கட்டுரைகளை அனுப்பலாம்
வெள்ளி, நவம்பர் 25, 2011
காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் ௩ -௧௨-௨0௧௧

காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் வரும் 3.12.2011 (சனிக்கிழமை ) அன்று கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கம்பன் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் என்ற தலைப்பில் ஒக்கூர் சோம சுந்தரம் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் நாச்சம்மை கண்ணன் அவர்களும், கம்பன் கூறும் இசை நுட்பங்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் முனைவர் செ. கற்பகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். நிகழ்வு மிகச் சரியாக மாலை ஆறுமணிக்குத் தொடங்கும். நிகழ்ச்சி ஏற்பாடு எம்.கே சுந்தரம் செட்டியார் சன் நகைக்கடை, காரைக்குடி அனைவரும் வருக.
உட்தலைப்புகள்
கம்பன் கழக டிசம்பர் மாதக்கூட்டம்2011
வியாழன், நவம்பர் 03, 2011
காரைக்குடி கம்பன் கழக நவம்பர் மாதக் கூட்டம்
காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் 2011 மாதக் கூட்டம் 5-11-2011 அன்று நடைபெற உள்ளது. அனைவரும் கம்பன் மணிமண்டபத்திற்கு 6 மணியளவி்ல் வந்து சேரவேண்டியது. தேவகோட்டை புனித சின்னப்பர் கல்வியியல்கல்லூரியின் கணினி அறிவியல் துறை மாணாக்கி செல்வி வீ.பிரபா கம்பனில் இளைய தலைமுறை என்ற தலைப்பிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தமிழாய்வுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை அவர்கள் கம்பனில் இலக்கிய மரபும் மாற்றமும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர். கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வந்திட அன்புடன் வேண்டுகின்றோம்.
உட்தலைப்புகள்
காரைக்குடி கம்பன் மாதக் கூட்டம் நவம்பர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)