புதன், ஆகஸ்ட் 31, 2011

உயிர்மை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம்

உயிர்மை சார்பில் வெளிவரும் உயிரோசை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம் வந்துள்ளது. அதன் பகுதி பின்வருமாறு ஞானபீட விருதுபெற்ற மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குறுப்பு குறித்த கட்டுரை யதார்த்த நிலையில் தனித்து விளங்கியது. சமச்சீர் கல்வி குறித்த முனைவர் மு.பழனியப்பனின் ஆய்வு, சமச்சீர் கல்வியின் தேவையை வலியுறுத்தும் அதே நேரத்தில் சமச்சீர் கல்வியில் இடம்பெற்ற பல்வேறு முரண்பாடுகளில் குறிப்பாக, ஔவையார் பாடலின் சொல் பிரிப்புத் தன்மையின் தவறு ஏற்படுத்தும் நகைப்பைத் தெளிவாக விளக்குகிறது. மற்றும் கவிதைகள், சிறுகதை, நேர்காணல் என்று இந்தப் பத்திரிகையில் வெளிவந்துள்ள அனைத்துமே சிறந்து விளங்குகின்றன.

தொடர்புக்கு : தொடரும் (காலாண்டிதழ்),

கண்ணன் அச்சகம், நாடார்பேட்டை, சிங்கம்புணரி - 630 502,

விலை : ரூ.10/-

கரூர் நகர்த்தார் சங்கத்தில் நகரத்தார் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் என்னுரை நிகழ்ந்தது

நகரத்தார் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா

கரூர் நகரத்தார் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா பி.எல்.ஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஆர். சேக்கப்ப செட்டியார் தலைமை விருந்தினராய் கலந்து கொண்டார். காலையில் நடைபெற்ற துவக்க விழாவில் கரூர் நகரத்தார் சங்க தலைவர் பழ. பழனியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் வள்ளியப்பன், செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். சிறப்பு விருந்தினராக கர்நாடக நகத்தார் சங்க துணைத் தலைவர் ரவி வீரப்பன், திருச்சி நகரத்தார் சங்க திருநாவுக்கரசு செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நகரத்தார் நேற்று – இன்று – நாளை என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாட்சிமைமிகு மன்னர் கல்லுாாி தமிழ்ப்பேராசிாியர் முனைவர் மு. பழனியப்பன் பேசினார். நகரத்தார் மலர் இளங்கோவன், ஆச்சி வந்தாச்சு நா. பழனியப்பன், புச்சரம் பழ. மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் அகல்யா மெய்யப்பன் நன்றி தொிவித்தார். மாலையில் திரைப்பாடல்கள் சமுதாயத்திற்கு வழி காட்டுகிறதா? வழி மாற்றுகிறதா? என்ற தலைப்பில் திருச்சி, அகில இந்திய வானொலி நிலையம் பாரதி பாபு நடுவராக பங்கு கொண்ட மகளிர் பாட்டு பட்டி மன்றமும் நடைபெற்றது.

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

காரைக்குடி கம்பன் கழக செப்டம்பர் மாதக் கூட்டம்


காரைக்குடி கம்பன் கழகத்தின் செப்டம்பர் 2011 மாதக்கூட்டத்தில் திரு சி. சு முருகேசன் அவர்களும், திரு சொ. சொ. மீ. சுந்தரம் அவர்களும் முறையே கம்பனில் வாழ்வியல், கம்பன் அடியார்கள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள் இந்நிகழ்வு 3.09.2011 அன்று மாலை 6 மணியளவில நடைபெற உள்ளது அனைவரும் வருக

திருவண்ணாமலை பயணம்






திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தேன்.
அப்போது என் புகைப்படக் கருவிக்குள் சிக்கிய படங்கள் இவை

திருவண்ணாமலையில் மாற்றுத்திரை நிகழ்வு











திருவண்ணாமலையில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில நிகழ்வாக மாற்றுத்திரை என்ற ஆவண, குறும்பட விழா நடைபெற்றது. அதில் ஆதி முதல் அந்தம் வரை கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இரு நாள்களும் நல்ல ஏற்பாட்டுடன் நேரம் போனதே தெரியாமல் உடனுக்குடன் காட்சிகள் மாறின. அரங்கேறின.வாழ்த்துக்கள் அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்கு
விழாவில் தோழர் மகேந்திரன் அவர்களின் பேச்சும், தோழர் நல்லக் கண்ணு அவர்களின் பேச்சும் வந்திருந்தோரை இந்நிகழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள வைத்தன. மாற்றுத்திரை என்பது மாற்றரசியலின் ஒருகூறு என்ற அவரின் செய்தி குறிக்கத்தக்கது.
மேலும் திரையிடல்கள் மிக்க தெளிவுடன் தேர்வு செய்யப் பெற்றிருந்தன. அன்பு, மற்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றி
அதிக கவனத்தை ஈர்த்தபடம் முல்லைத்தீவு சகா. இயக்குநர் சோமீதரன். அவரின் படம் பேசிய பிறகு அவர் பேசினார். அதில் பல தகவல்கள் நெஞ்சை உருக்கின. இந்தப்படத்தைப் பார்த்த இடைவெளியில் ஒரு பெண் அடுத்தநாள் மற்றொருவரிடம் இப்படிச் சொன்னார். அந்தப் படம் என்னை அழவைத்துவிட்டது என்று

மற்றபடி என்பெயர் பாலாறு, பச்சை ரத்தம், தெருவில் இறங்கும் குதிரைகள் போன்ற நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டன என்றாலும் தேவையான தளங்கள்

மக்கப் மங்காத்தா, இரங்கலும் இரங்கல் நிமித்தமும் முதலான எளிமையான படங்களும் மனத்தை ஈர்த்தன.

செங்குருதி என்ற படம் பல விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் அந்தப் படம் சரியான அளவில் புரிந்து கொள்ளப்பட வில்லை

நண்பர் முரளி இயக்கிய தேசிய விருது பெற்ற படத்தின் காட்சி யமைப்புகள் தேர்ந்த கலைஞர்களால் அது உருவாக்கப் பெற்றது என்பதை மெய்ப்பித்தது. பரவாயில்லை நல்ல படங்களுக்குத் தான் இந்தியாவில் விருதளிக்கிறார்கள்.

இருளர் பற்றிய குட்டி ரேவதி தயாரித்த படத்தின் இசையும், அதனுடன் கூடிய நடனமும் இன்னமும் ஒலிக்கின்றன.

நல்ல கல்லூரி, நல்ல நிகழ்வு
புதிய பாதைக்குச் செல்கிறது மாற்றுத்திரை