காயங்கள்
மருந்துகள்
சட்ட திட்டங்கள்
கரவொலிகள்
இவற்றோடு
விளையாட்டும
இவற்றிற்கு உட்பட்டு
விளையாட முடிந்தவர்கள்
விளையாடுகிறார்கள்
முடியாதவர்கள்
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
இன்றைய ஆட்டநாயகர்கள்
நாளைய நடுவர்கள
வெற்றிகள் பதிவு பெறுகின்றன
தோல்விகளுக்கும் எண்ணிக்கை உண்டு
ஆடுபவர்கள் விருதுகள் பெறுகிறார்கள்
பதிவும் பெறாமல்
விருதுக்கும் வலிந்து நிற்காமல்
என்றைக்கும் சிரஞ்சீவியாய்ப் பார்வையாளர்கள